என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl suicide. பெண்"

    • கடந்த 6-ந் தேதி நந்தினிக்கு பிறந்தநாள். தனது பிறந்த நாளை ஏற்காட்டில் கொண்டாடலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு லோகு மணி, ஏற்காடு செல்ல வேண்டாம், உள்ளூரிலேயே கொண்டா–டலாம் என கூறியுள்ளார்.
    • இதனால் மனம் உடைந்து காணப்பட்ட நந்தினி, தனது தாய் வீட்டில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தையுடன் சென்றார. அப்போது, தனது தந்தையிடம் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி, எலி பேஸ்ட்டை வாங்கிக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் லோகு மணி (வயது 28). இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அமரகுந்தி அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த நந்தினி (வயது 25) என்பவரை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி நந்தினிக்கு பிறந்தநாள். தனது பிறந்த நாளை ஏற்காட்டில் கொண்டாடலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு லோகு மணி, ஏற்காடு செல்ல வேண்டாம், உள்ளூரிலேயே கொண்டா–டலாம் என கூறியுள்ளார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட நந்தினி, தனது தாய் வீட்டில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தையுடன் சென்றார. அப்போது, தனது தந்தையிடம் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி, எலி பேஸ்ட்டை வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவருடன் வீட்டிற்கு வந்த நந்தினி, அந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால் நந்தினிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை கணவர் லோகுமணி, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    அங்கு டாக்டர்களிடம் எலி மருந்து சாப்பிட்ட விஷயத்தை கூறினார். அதை தொடர்ந்து நந்தினிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் சப் கலெக்டர் மற்றும் கொண்ட–லாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×