என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவிலில் சாமி கும்பிட வந்த சிறுமியிடம் அர்ச்சகர் சில்மிஷம்- உயர் அதிகாரிகள் விசாரணை
- சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டு செல்வார்கள்.
- அர்ச்சகர் ஒருவரும், அவருடைய பொறுப்பில் 10-க்கும் மேற்பட்ட பதிலி அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்த கோவிலில் அர்ச்சகர் ஒருவரும், அவருடைய பொறுப்பில் 10-க்கும் மேற்பட்ட பதிலி அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சுமார் 15 வயதுடைய சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் நந்திகேஸ்வரர் சிலை அருகே வந்தபோது அர்ச்சகர் ஒருவர் கன்னத்தைக் கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு அருகில் இருந்த பெற்றோர்கள் சத்தம் போட்டனர். அப்போது, அங்கிருந்த திருக்கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ஒருவர், புகார் கொடுத்தால் உங்கள் பெண்ணுக்கு தான் அவமானம் நேரிடும் என்று மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
இது சம்பந்தப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






