என் மலர்
சேலம்
- அஸ்மா தனது வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது விக்னேஷ்சை அழைத்துள்ளார்.
- அஸ்மா அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், மாவெலிபாளையம் குட்டகாட்டைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு கவுதம், விக்னேஷ் என்ற 2 மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர். கவுதம், காவியா இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகன் விக்னேஷ் (25) எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், விக்னேஷ்க்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து, ஏத்தாப்பூர் உத்தரகாண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். வருகின்ற 25-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் விக்னேஷ், சங்ககிரியில் வசிக்கும் திருநங்கையான அஸ்மா என்பவர் வீட்டில் எலெக்ட்ரீசியன் வேலை செய்தபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அஸ்மா தனது வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது விக்னேஷ்சை அழைத்துள்ளார். அங்கு இருவரும் போட்டோ எடுத்துள்ளனர்.
அப்போது விக்னேஷ், தனக்கு நிச்சயம் செய்த பெண்ணின் போட்டோவை அஸ்மாவிடம் காட்டியுள்ளார்.
அதற்கு அஸ்மா, நீ அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் விக்னேஷின் வீட்டுக்கு வந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளோம், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி டார்ச்சர் செய்ததாக தெரிகிறது. மேலும் விக்னேஷுக்கு நிச்சயமான பெண்ணின் செல்போன் நம்பருக்கு விக்னேஷ் உடன் ஜோடியாக உள்ள போட்டோவை அனுப்பி, நான் தான் விக்னேஷை திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் விக்னேஷ் வீட்டிற்கு வந்து விக்னேஷ், திருநங்கையுடன் தொடர்பு வைத்திருந்த போட்டோவை காட்டி திருமண நிச்சயத்தை நிறுத்தி விட்டனர்.
இதனால் மனமுடைந்த விக்னேஷ், தனது உறவினர் வீடான பரமேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டில் இருந்த சீலிங் பேனில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை கீழே இறக்கி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
- பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரி யர்கள், இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் உபரி பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலும் வெளி யிடப்பட்டது.இதனிடையே நடப்பாண்டில் போதுமான பாடவேளை இல்லாத முதுகலை ஆசிரியர்களை 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிப்ப துடன், அதன் அடிப்படை யில் பட்டதாரி ஆசிரி யர்களை உபரியாக கணக்கிட்டு பட்டியல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்ட தாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தலைவர் பாஸ்கரன், பொரு ளாளர் மலர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலா ளருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர். அதில், முதுகலை ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்க கூடாது, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைபடியே பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியு றுத்தினார்.இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரி வித்துள்ளது.
- சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை கலெக்டர் கார்மேகம் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையா ளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வா கத்தால் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்ப டுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படு கிறது.
மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளை களின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதி முறைகளையும் முழுமை யாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு மாறன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர்.
- கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ஆத்தூர் பைத்தூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா (வயது 30), கர்ப்பிணியான இவரும், பன்னீர்செல்வமும் கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் வெளியே பன்னீர்செல்வம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுவது, தன்னை குறித்து தான் என நினைத்த பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி சித்ரா, மகள் கோகிலா, மருமகன் சிரஞ்சீவி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அதனை தடுக்க வந்த சத்யாவையும் தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 762 கனஅடி தண்ணீர் வந்தது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 762 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1237 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.74 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.70 அடியாக சரிந்தது
- ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.
- திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்ச்சாவடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 ஐம்பொன் சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 4 சிலைகளும் உள்ளது.
இந்த கோவிலில் பூஜை செய்து வரும் பூசாரி குமரவேல் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இரவு நேரத்தில் கோவிலில் காவலாளிகள் யாரும் இல்லாததை நோட்டமிட்டுள்ளனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.
இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் கோவில் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஐம்பொன் சிலைகள் உள்பட 7 சிலைகள் திருட்டு போயியுள்ளதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இது பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் கோவில் முன்பு ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் முழுவதும் பார்வையிட்டனர். சிலைகள் திருடப்பட்ட அறைக்குள் சென்று, தடயங்கள் சேகரித்தனர்.
கொள்ளை குறித்து, பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
- சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் பல்வேறு சாலை திட்டப்ப ணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத்துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒப்பந்த தாரர்க ளிடம் சாலை பணிகளையும், புறவழிச் சாலை பணிகளை யும், பாலப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கி னார்.
இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தாரகேஸ்வ ரன், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியின் ஒப்பந்ததாரர்கள் மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.
- தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
- சேலத்தில் இன்று காலையில் வெயில் கொளுத்தியது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடக்கத்தில் வெயிலின் அளவு குறைவாக இருந்த நிலையில், கடந்த 1½ வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சேலத்தில் இன்று காலையில் வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்த காணப்பட்டது. நேற்று சேலத்தில் 103 பாரன்ஹீட்டாக வெயில் அளவு பதிவானது.
இன்றும் அதே அளவு பதிவானது இதேபோல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.
- ஊர்க்காவல் படையில் பணி யாற்றி வருவதாக கூறி, ஹரினேஷ் தரப்பினரிடம் திடீரென தகராறு செய்துள்ளார்.
- அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டுகளை பறிக்க முயன்றதாக தெரிகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கொத்தம்பாடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23), இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
இவரது நண்பர்களான வாழப்பாடியைச் சேர்ந்த தினேஷ் (24), ஏ.என்.மங்களத்தை சேர்ந்த கில்சன் (24), ரஞ்சித்குமார் (24), இளையராஜா (24), ஆகிய 5 பேரும், நேற்று அதிகாலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள டீ கடையில் நின்றிருந்தனர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த டீ கடைக்கு கள்ளக்கு றிச்சியை சேர்ந்த ஹரினேஷ் (18), பாலா (18), சர்குண பவித்திரன் (18), கோபிநாத் (17), சிபிராஜ் (18), ஆகாஷ் (18), அஜய் (18) ஆகிய 7 பேரும் 3 மோட்டார் சைக்கி ளில் வந்தனர். இவர்கள் அனைவரும் கோவைக்கு சென்று விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்த பிரபாகரன், தான் ஊர்க்காவல் படையில் பணி யாற்றி வருவதாக கூறி, ஹரினேஷ் தரப்பினரிடம் திடீரென தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டுகளை பறிக்க முயன்றதாக தெரிகிறது.
மேலும் ஹரினேஷ் தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக ஹரினேஷ் மற்றும் அவரது நண்பர்கள், இதுகுறித்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரூமுக்கு தகவல் தெரிவித்த னர். அவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி வாழப்பாடி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.
தொடர்ந்து பிரபாகரன், தினேஷ், கில்சன், ரஞ்சித்குமார், இளையராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி மாலையில் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
- தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
- இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.
சேலம்:
தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.
விண்ணப்பதிவு தொடங்கியது
இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புக ளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.
இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவின ருக்கு கட்டண மில்லை. விருப்பமுள்ள வர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வரியாக வருகிற ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரி களில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.
*** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.
சேலம்:
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி, மே 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் சேலம் தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீராங்கனையும், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியுமான உமா மகேஸ்வரி, சப்-ஜூனியர் 84 கிலோ எடை பிரிவில் ஒட்டுமொத்தமாக 315 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.
இதே உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பிரியா 69 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், லாவண்யா 47 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பவதாரணி 47 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், ஜாஸ்மின் 52 கிலோ எடை பிரிவில் வெண்கலம் பதக்கமும் வென்று பெருமை சேர்த்தனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா சேலம் தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலை யத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் அசோகன், கவுன்சிலர் கோபால், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் ஓ.டெக்ஸ் இளங்கோவன், உடற்ப யிற்சி நிலைய செயலாளர் பொன் சடையன், தலை வர் தெய்வப்பிள்ளை, ஐ.எல்.ஹெச்.டி கைத்தறி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வடிவேல், சேலம் மாவட்ட ஊரக குத்துச் சண்டை சங்க தலைவர் மருது பிள்ளை, சேலம் மாவட்ட கால்பந்து சங்க செயற்குழு உறுப்பி னர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
மேலும் தமிழ்நாடு வலுத்தூக்கும் சங்க தலை வர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, செயலாளர் எஸ்.நாகராஜன் ஆகியோரும் வீராங்கனைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.






