என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு சேலத்தில் பாராட்டு விழா
    X

    தேசிய வலு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம். 

    தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு சேலத்தில் பாராட்டு விழா

      சேலம்:

      தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி, மே 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற்றது.

      இதில் சேலம் தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீராங்கனையும், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியுமான உமா மகேஸ்வரி, சப்-ஜூனியர் 84 கிலோ எடை பிரிவில் ஒட்டுமொத்தமாக 315 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.

      இதே உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பிரியா 69 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், லாவண்யா 47 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பவதாரணி 47 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், ஜாஸ்மின் 52 கிலோ எடை பிரிவில் வெண்கலம் பதக்கமும் வென்று பெருமை சேர்த்தனர்.

      இவர்களுக்கான பாராட்டு விழா சேலம் தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலை யத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் அசோகன், கவுன்சிலர் கோபால், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் ஓ.டெக்ஸ் இளங்கோவன், உடற்ப யிற்சி நிலைய செயலாளர் பொன் சடையன், தலை வர் தெய்வப்பிள்ளை, ஐ.எல்.ஹெச்.டி கைத்தறி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வடிவேல், சேலம் மாவட்ட ஊரக குத்துச் சண்டை சங்க தலைவர் மருது பிள்ளை, சேலம் மாவட்ட கால்பந்து சங்க செயற்குழு உறுப்பி னர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

      மேலும் தமிழ்நாடு வலுத்தூக்கும் சங்க தலை வர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, செயலாளர் எஸ்.நாகராஜன் ஆகியோரும் வீராங்கனைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

      Next Story
      ×