என் மலர்
சேலம்
- சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார்.
- ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன.
சேலம்:
சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு ெபற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப் பட்டது.
அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார்.
இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள்.
- பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
சேலம்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள். இதையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதன்படி சேலம் கோட்டம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகிற 3-ந் தேதி வைகாசி பவுர்ணமியொட்டி சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் உட்பட்ட ஊர்களில் இருந்து 75 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது .
இந்த சிறப்பு பஸ்கள் நாளை காலை முதல் 4-ந் தேதி வரை இயக்கப்படும். இதனை பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழிலுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது.
- இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.
வாழப்பாடி:
இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழி லுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மாட்டுவண்டிகள் தற்கால குழந்தைகள் காண்பதற்கே அரிதாகி விட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகளால் மற்ற துறைகளைப் போலவே, வேளாண்மைத் துறையிலும் நவீன கருவிகள், எந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், ஏர் உழுதல், தண்ணீர் இரைத்தல், நாட்டு நடவு செய்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லல், கதிரடித்து துாற்றி தானியங்களை பிரித்தெ டுப்பதல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட அனைத்து வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது வழக்கொழிந்து போனது.
குறிப்பாக, கட்டை வண்டிகளுக்கும் மாற்றாக, டிராக்டர், டெம்போ போன்ற வாகனங்களும், கதிர் அறுவடைக்கு எந்திரங்க ளுமே பயன்படுத்தப்படுகிறது.
சமீப காலமாக, தமிழகத்தில் குக்கிரா மங்களிலும் கூட காளைகளை பூட்டி ஏர் உழவதும், கட்டை மாட்டு வண்டியில் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதும் பயன்பாட்டில் இல்லை. தற்கால குழந்தைகள் காண்பதற்கே கட்டை மாட்டு வண்டிகள் அரிதாகி விட்டது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதி கிரா மங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவ்வப்போது தார்சாலையில் செல்லும் மாடு பூட்டிய கட்டை வண்டிகளை தற்கால குழந்தைகள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து பாரம்பரிய ஆர்வலர் கலைச்செல்வி கூறியதாவது:-
தமிழக கிராமப்புற விவசாயிகளின் பாரம்பரிய சின்னமாக கட்டை மாட்டு வண்டிகள் திகழ்ந்து வந்தன. காலத்திற்கேற்ப நவீன கருவிகள், எந்திரங்கள், வாகனங்களின் வருகை மிகவும் அவசியம் என்ற போதிலும், நமது பாரம்பரிய சின்னமான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் பரிணாம வளர்ச்சியில் இதன் பங்கு குறித்து, தற்கால குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவது, கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து மறைந்து போகாமல் காக்க வேண்டியது அவசியமாகும்.
களைச்செடிகள், கதிர் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், அரிசி எடுக்கப்பட்ட நெல் தவிடு, எண்ணை எடுக்கப்பட்ட பிண்ணாக்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டு உழைக்கும் காளைகளையும், எவ்வித எரிபொருள் செலவுமின்றி போக்குவரத்துக்கு பயன்படும் கட்டை வண்டிகளையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊக்குவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது.
- சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. இதில் சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் 25 பேர் காயமடைந்தனர்.
காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய மாடு பிடி வீரர்களுக்கும், பிடி படாது சீறிப்பாய்ந்த காளை களின் உரிமையாளர்க ளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. வாழப்பாடி தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியாபுரம் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.
சேலம் ஆர்.டி.ஓ மாறன், சேலம் போலீஸ் எஸ்.பி சிவக்குமார், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று மிகுந்த ஆரவா ரத்தோடு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.
- பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
- கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேலம்:
சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு பெற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.
அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார்.
இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.78 அடியாக இருந்த அணை நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.72 அடியாக சரிந்தது.
இனிவரும் நாட்களில் இதேபோல் தொடர்ந்து நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
- வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததால் அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தலைவாசல் போலீசுக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
மலை பகுதியில் விவசாய தோட்டத்தின் அருகில் சாலை ஓரத்தில் அந்த வாலிபர் இறந்து கிடந்ததால் யாரேனும் அவரை அடித்துக் கொன்று வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் வாலிபரின் பிணத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த வாலிபரைஅடையாளம் காணும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
- கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ேபாக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள பஸ்கள் மட்டும் இயக்க தகுதி சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நடப்பாண்டு பள்ளிகள் திறக்கும் முன்பே, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங் களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள னர். இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் பெரும் பாலான வாகனங்களில் சி.சி.டி.வி காமிரா, சென்சார் கருவி உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்படவில்லை. மேலும் சில பஸ்களில் சீட் பெல்ட், மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்டவை சேதமடைந்து இருந்தது. இதனால் இந்த 197 பள்ளி வாகனங்களை இயக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப் படவில்லை. குறைப்பாடு கண்டறியப்பட்ட வாகனங்கள், குறைபாட்டை நிவர்த்தி செய்த பிறகே தகுதிச்சான்று வழங்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.
- ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார்.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), டிரைவர். இவர், ஓமலூரில் இருந்து ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
இந்த செங்கல் பாரத்தின் மீது கூலி தொழிலாளிகளான ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (31), மாட்டுக்காரன் புதூரை சேர்ந்த மதியழகன் (22) ஆகிய அமர்ந்து சென்றனர்.
கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் முருகேசன் பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பிக்அப் வாகனம், டிப்பர் லாரி மீது மோதியது. இதில் செங்கல் மீது அமர்ந்திருந்த ராஜா, மதியழகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதியழகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் சாலையின் குறுக்கே சென்ற லட்சுமியும் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார், அங்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விசாரணையில், அவரது பெயர் ஜெயமணி என்பது தெரியவந்தது. ஆனால் ஊர் முகவரி, அவரது உறவினர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டது.
- இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேலம்:
இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டது. இதில் அதிகாரி கிரேடு பி பொது பிரிவுக்கு 222 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த இடங்களை தவிர்த்து 38 இடங்கள் டி.இ.பி.ஆர். பிரிவுக்குக்கும், டி.எஸ்.ஐ.எம். பிரிவில் 31 இடங்கள் வழங்கப்பட்டள்ளது. இதில் டி.இ.பி.ஆர். பதவிக்கு பொருளியல், நிதி, வணிக பொருளியல், வேளாண்மை பொருளியல், தொழில் பொருளியல், சர்வதேச நிதி, அளவு தொழில் நுட்பங்கள், வங்கி மற்றும் வணிக நிதி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல் டி.எஸ்.ஐ.எம். பதவிக்கு புள்ளியல், கணித புள்ளியல், கணித பொருளியல், எக்னோமெட்ரிக்ஸ், புள்ளியல் தகவலியல், பயன்பாடு புள்ளியல் மற்றும் தகவல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வயது 21- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வருகிற ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
- சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 112 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
வாகன விபத்துக்களை குறைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலம், தருமபுரியில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 112 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.






