search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்குவைகாசி பவுர்ணமியொட்டி 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்குவைகாசி பவுர்ணமியொட்டி 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள்.
    • பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சேலம்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள். இதையொட்டி பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    அதன்படி சேலம் கோட்டம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருகிற 3-ந் தேதி வைகாசி பவுர்ணமியொட்டி சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் உட்பட்ட ஊர்களில் இருந்து 75 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது .

    இந்த சிறப்பு பஸ்கள் நாளை காலை முதல் 4-ந் தேதி வரை இயக்கப்படும். இதனை பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×