search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சரகத்தில் 112 பேரின் லைசென்ஸ் ரத்து
    X

    சேலம் சரகத்தில் 112 பேரின் லைசென்ஸ் ரத்து

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
    • சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 112 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    வாகன விபத்துக்களை குறைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலம், தருமபுரியில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 112 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×