என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
- தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான சீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, ஆங்கி லேயர் ஆட்சி காலத்தில், 1942–ம் ஆண்டு ஆவணி மாதம் 12 –ந் தேதி, ரூ.750 செலவில் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான மரத்தேர் உருவாக்கப்பட்டது.
இந்த பழைய மரத்தேர் வலுவிழந்ததால், ரூ.20 லட்சம் செலவில், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. இதனை யடுத்து, தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.. தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக ளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) சென்றாயப்பெருமாள், பூதேவி, சீதேவியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனை களும், திருக்கல்யாண வைபோவமும், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவமும் நடைபெறு கிறது.
இதனையடுத்து, நாளை (சனிக்கிழமை) காலை திருத்தேர் நிலை பெயர்த்த லும், தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்வுகளும், மாலை 3 மணிக்கு ராஜவீதிகளில் தேரோட்டமும் நடைபெறு கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையின் நீர் மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் சுற்று வட்டார பகுதியில் சூறை காற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 867 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1503 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 103.72 அடியிலிருந்து 103.70 அடியாக சரிந்துள்ளது.
- தீ விபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது.
- காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் அருகே எஸ்.கொல்லப்பட்டி எனும் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் இன்று மாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீவிபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. ஒரு பெண் உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (வயது 50), சதீஷ் குமார் (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா(வயது 45), மோகனா (வயது 38), மணிமேகலா (வயது 36), மகேஸ்வரி (வயது 32), பிரபாகரன் (வயது 31), பிருந்தா (வயது 28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாரமங்கலம் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் தறித் தொழிலாளி. இவர் ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியில் பணிபுரிந்து வருகிறார்.
- இந்த நிலையில் 17 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாரமங்கலம் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). தறித் தொழிலாளி. இவர் ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 17 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் போலீசார், விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலைளில் நேற்று அவர், தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், அங்கு சென்று மணிகண்டனை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
- சேலம் மோகன் நகர் மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் இவர், 14 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது எட்டி பார்த்தார்.
- இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சரவணன் மீது புகார் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் மோகன் நகர் மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், 14 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது எட்டி பார்த்தார். இது பற்றி சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சரவணன் மீது புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்ேசா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர் சரவணனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- பனமரத்துப்பட்டி அடுத்த கூட்டாறு பகுதியில் நேற்று மதியம் கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மினி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
- அப்போது கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த கூட்டாறு பகுதியில் நேற்று மதியம் கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மினி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜா, தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்.
அப்போது கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி குரால்நத்தம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடாசலம் (வயது 44) என்பவரை கைது செய்தனர்.
- கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
- இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி யைச் சேர்ந்த முத்துசாமி என்பவ ருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
3 பேர் காயம் அடைந்த னர். மேலும் ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளை ஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு இளைஞரின் வீடு ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த இளைஞரின் வீட்டிற்கு யாரும் இல்லாதபோது போலீஸ் ஜீப்பில் வந்த தனிப்படை போலீசார், வீட்டின் கேட்டை திறந்து அங்கிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து ஆய்வு செய்தனர்.
அதேபோல் அங்கு கிடந்த வெற்று கேனை எடுத்து நுகர்ந்து பார்த்தனர். பின்னர் அந்த கேனை அங்கேயே போட்டு விட்டனர். தொடர்ந்து 6-க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து அந்த இளைஞர் ஆதாரங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடினார்கள்.
அதுபோல் மற்ற இளைஞர்களின் வீடுகளுக்கும், அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் சென்று தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இதில் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது தெரியவில்லை.
தொடர்ந்து தனிப்படை போலீசார், வட மாநில இளைஞர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது.
- இதற்காக சேலத்திலிருந்து 19 சிறப்பு பேருந்துகள் இயங்கி வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்காக சேலத்திலிருந்து 19 சிறப்பு பேருந்துகள் இயங்கி வந்தது.
கோடை விழா நிறைவடைந்ததால் சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் சேலம் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 4 மணி நேரமாக ஏற்காடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலாப் பயணிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஏற்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதை தொடர்ந்து ஏற்காட்டுக்கு கூடுதலாக பஸ் இயக்க போக்குவரத்து துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ் விடவும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு உள்லது என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கோவில் கும்பாபிஷே கங்கள், திருமண சுப முகூர்த்தங்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
- இந்நிலை யில், நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், செல்லப்பம்பாளையம், நகப்பாளையம், அய்யம்பா ளையம், ஆனங்கூர், சின்ன மருதூர், பெரிய மருதூர், கபிலர்மலை, தண்ணீர் பந்தல், பரமத்திவேலூர், பர மத்தி, மோகனூர், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம், நடையனூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, காக்கட்டான், செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
பூக்கள் பறிக்கும் தருவா யில் வரும்போது ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிக ளுக்கு வரும் வியா பாரிக ளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர். பூக்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்க ளைச் சேர்ந்த பூ வியாபாரி கள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைக ளாகவும், தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்து வருகின்ற னர். அதேபோல் சில வியா பாரிகள் உதி ரிப்பூக்களை பாக்கெட்டுகளாக போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கோவில் திருவிழா, திரு மண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போது. பூக்களின் விற்பனை உச்சத்தில் இருப்பது வாடிக்கை. மற்ற காலங்க ளில் அதன் விலை குறைந்து காணப்படும். அதன்படி, ஒவ்வொரு வாரமும் பூக்க ளின் விலை அதிகரிப்பது, குறைவது என மாறி மாறி இருந்து வருகிறது.
கோவில் கும்பாபிஷே கங்கள், திருமண சுப முகூர்த்தங்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இந்நிலை யில், நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரம் ரூ.350-க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி, நேற்று கிலோ, ரூ.600 விற்பனை யானது. ரூ.300-க்கு விற்பனையான முல்லைப் பூ நேற்று ரூ.600-க்கு விற்பனையானது. ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி, ரூ.170-க்கு விற்பனையானது. ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி, நேற்று ஒரு கிலோ, ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.150-க்கு விற்பனையான ரோஜா ரூ.250-க்கு விற்பனை யானது. இதேபோல் ரூ.180-க்கு விற்பனையான செவ்வந்தி, ரூ.280-க்கு விற்ப னையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ள தால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது.
- ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டூர்:
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருதின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. முதல் பிரிவு மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் என 2 பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுதிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
- அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது.
சேலம்:
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் கத்திரிவெயில் காலமாக கருதப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது. சேலத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அக்னி வெயில் காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இன்றும் காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. தகிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.






