search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்திரி வெயில் முடிந்தும் தகிக்கும் கோடை வெப்பம்
    X

    கத்திரி வெயில் முடிந்தும் தகிக்கும் கோடை வெப்பம்

    • தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
    • அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது.

    சேலம்:

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் கத்திரிவெயில் காலமாக கருதப்படுகிறது.

    அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது. சேலத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அக்னி வெயில் காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இன்றும் காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. தகிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×