search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "serious"

  • நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார்.
  • அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  சேலம்:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரபு (வயது 38). இவர் மீது, காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

  இவர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

  இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி உமாராணி (25) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  இது குறித்து உமாராணி தன் கணவர் சுரேசிடம் தெரிவித்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவின் தலையில் அறிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அந்த பகுதியினர் மீட்டு சேலத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

  அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடியை வெட்டி விட்டு தப்பி ஓடிய சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  • கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
  • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி யைச் சேர்ந்த முத்துசாமி என்பவ ருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

  3 பேர் காயம் அடைந்த னர். மேலும் ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.

  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளை ஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  இதில் ஒரு இளைஞரின் வீடு ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த இளைஞரின் வீட்டிற்கு யாரும் இல்லாதபோது போலீஸ் ஜீப்பில் வந்த தனிப்படை போலீசார், வீட்டின் கேட்டை திறந்து அங்கிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து ஆய்வு செய்தனர்.

  அதேபோல் அங்கு கிடந்த வெற்று கேனை எடுத்து நுகர்ந்து பார்த்தனர். பின்னர் அந்த கேனை அங்கேயே போட்டு விட்டனர். தொடர்ந்து 6-க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து அந்த இளைஞர் ஆதாரங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடினார்கள்.

  அதுபோல் மற்ற இளைஞர்களின் வீடுகளுக்கும், அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் சென்று தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இதில் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது தெரியவில்லை.

  தொடர்ந்து தனிப்படை போலீசார், வட மாநில இளைஞர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), கூலி தொழிலாளி.
  • சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மொபட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

  நேற்று முன்தினம் கருத்தராஜாபாளையம் துணை மின் நிலையம் அருகில் உள்ள விவசாய தோட்ட வேலி பகுதியில் முருகேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை யார் செய்தார்? கொலைக்கான காரணம் என்ன ? என பல்வேறு கேள்விகள் கேட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

  ×