என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weaver arrested"

    • சேலம் மாரமங்கலம் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் தறித் தொழிலாளி. இவர் ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியில் பணிபுரிந்து வருகிறார்.
    • இந்த நிலையில் 17 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாரமங்கலம் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). தறித் தொழிலாளி. இவர் ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 17 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் போலீசார், விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலைளில் நேற்று அவர், தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், அங்கு சென்று மணிகண்டனை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    ×