சேலம் பழைய பஸ் நிலையத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு

சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
Published on

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார், அங்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விசாரணையில், அவரது பெயர் ஜெயமணி என்பது தெரியவந்தது. ஆனால் ஊர் முகவரி, அவரது உறவினர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com