என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்டத்தில், விவசாயிகளால் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் அதிகமாக இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், விவசாயிகளால் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மேச்சேரி, கருமந்துறை மலை கிராமங்கள், வாழப்பாடி, தலைவாசல், மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி உள்பட பல இடங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.

    கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி, கோடை காலத்துக்கு முன்னர் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள், கடந்த சில மாதங்களாக அதிகளவில் விளைச்சல் கொடுத்து வந்தன.

    இதனால் சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிலோ ரூ.20-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகளின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால், விளைச்சல் குறைய தொடங்கி, சந்தைக்கு தக்காளி வரத்து சரிய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளது.

    தற்போது உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.34 முதல் ரூ.38 வரையிலும், தினசரி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாநகரில் உள்ள உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு சுமார் 30 டன் தக்காளியை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தக்காளி தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட விவசாயிகளிடம் இருந்தும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் உழவர் சந்தைக்கு தக்காளி கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம், தேசிய மின்னணு சந்தை மூலம், சேலம் மாவட்டத்துக்கு கடந்த 2 மாதங்களில் 900 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. புதியதாக பயிரிடப் பட்டுள்ள தக்காளி செடிகளில் மகசூல் கிடைத்திட ஒரிரு வாரங்கள் ஆகும்.

    எனவே தக்காளி தேவையை பூர்த்தி செய்திட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் தேசிய மின்னணு சந்தையை பயன்படுத்தி தக்காளி கொள்முதல் செய்திட திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • ந்தரேஸ்வரிக்கும், கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் கிராமம் செம்மண் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் அந்த குழந்தை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுந்த ரேஸ்வரிக்கும், கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுந்தரேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சுந்தரேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து சுந்தரேஸ்வரியின் பெற்றோர், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுந்தரேஸ்வ ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரேஸ்வரி இறந்த வழக்கில் உரிய விசாரணை நடைபெற வில்லை என்றும், அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவு கோரி உறவினர்கள் நேற்று மாலை எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், சுந்தரேஸ்வரியின் உடல் சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக சுந்தரேஸ்வரி உடலை மீண்டும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தொடர்ந்து சுந்தரேஸ்வரி சாவில் மர்மம் நீடித்து வருகிறது. அவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்பு குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் 3 நாட்கள் விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சரவணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சரவிஷம் குடித்த போலீஸ் ஏட்டுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    • ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
    • மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.

    சேலம்:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வருதராஜன், பொருளா:ளர் ராணி உள்ளிட்ட நுஇர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.80-இல் இருந்து ரூ.150 ஆகவும், மருத்துவ காப்பீடு ரூ.300-இல் இருந்து ரூ.497 ஆகவும் உயர்த்தியுள்ளதை மாற்றி அமைக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து 3-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.
    • நேற்று இரவு முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து 3-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.

    நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் மாதம் இறுதி வரை அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்படும். அடுத்த மாதம் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி, ஆகஸ்டு மாதம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி என பாசன தேவைக்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூர் அரியலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதேசமயம், நேற்று காலை அணைக்கு வினா டிக்கு 867 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து, இன்று காலை 579 கன அடியாக சரிந்தது. இதேபோல், நேற்று 103.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.86 அடியாக குறைந்து உள்ளது. நீர்வரத்தை விட தண்ணீர் அதிகளவு திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    • மு.க.ஸ்டாலின் சேலம் வருகையை ஓட்டி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
    • இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையை ஓட்டி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர், மேட்டூர் அணையை திறந்து வைக்க மேட்டூருக்கு சென்றதால் அவருடன் பாதுகாப்பு பணியில் டி.ஜி.பி சைலேந்தி ரபாபு ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கருமலை கூடல் போலீஸ் நிலையத்தில் சென்ற அவர், போலீஸ் நிலைய வர வேற்பாளர் பணி குறித்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலைய பதிவேடு களையும் பார்வையிட்டார்.

    என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வர்களை கைது செய்துள்ளீர்கள் என போலீசாரிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசா ரித்தார்.போலீஸ் நிலை யத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறதா என்றும் அவர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் பொது மக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்க ளின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசா ருக்கு அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக மேச்சேரி போலீஸ் நிலையத்திலும் பதிவேடுகளை பார்வை யிட்டார். 2 போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்ததில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட் டுள்ளது என்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய எழுத்தர்களுக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரையும் அவர் பாராட்டினார். முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவ லர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றி னார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பா ளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்கா ணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்தி ரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாக ராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.

    • ராமச்சந்திரன் (வயது 15) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் பள்ளக்காடு பகுதியில், ஜெயராமன் என்பவர் மகன் ராமச்சந்திரன் (வயது 15) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் காயமடைந்தார். அவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்த அங்கு வந்த உறவினர்கள் பலியான ராமச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று காலையில் திறக்கப் பட்டது.
    • மாவட்டத்தில் உள்ள 288 அரசு பள்ளிகள், 25 அரசு உதவி பெறும் பள்ளி கள், 224 தனியார் பள்ளிகள் என 537-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டது.

    சேலம்:

    1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2022-2023 -ம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. இதையடுத்து கோடை விடுமுறை விடப்பட்டது. அதனை ெதாடர்ந்து புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சேலம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்று வந்தது.

    5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவி கள் தாங்கள் படித்த பள்ளி களில் இருந்து டி.சி. (மாற்றுச்சான்றிதழ்) வாங்கிக் கொண்டு 6-ம் வகுப்பில் சேர்ந்தனர். அதுபோல் 10-ம் வகுப்பில் ேதர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் மாற்றுச்சான்றிதழ் பெற்று 11-ம் வகுப்பில் சேர்ந்தனர்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று காலையில் திறக்கப் பட்டது. மாவட்டத்தில் உள்ள 288 அரசு பள்ளிகள், 25 அரசு உதவி பெறும் பள்ளி கள், 224 தனியார் பள்ளிகள் என 537-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டது. 6-ம் வகுப்பில் சேர்ந்த மாணவ- மாணவிகள் புதிய பள்ளி கூடத்துக்கு உற்சாக மாக சென்றனர். அதுபோல் 6 முதல் 11-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் புதிய கல்வி யாண்டில் கல்வி பயில தங்களது பள்ளிக்கூ டத்துக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    • கடந்த 1½ மாதங்களாக கார்த்திகா கணவனை பிரிந்து மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
    • கடந்த 7-ந் தேதி பாலமுருகன், அவரது தந்தை சுப்பிரமணி மற்றும் பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோருடன் வந்து, மணி கண்டனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34). இவரது மனைவி கார்த்திகா (25). இவர்களுக்கு பிரித்வி (2) என்ற குழந்தை உள்ளது.

    பாலமுருகன் டிரைவர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது நண்ப ரான, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36) என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் மணி கண்டன் அடிக்கடி பாலமுரு கன் வீட்டிற்கு வந்து சென்றார். இதனால் பால முருகன் மனைவி கார்த்தி காவும், மணிகண்டனும் பழகி வந்துள்ளனர்.

    இவர்களுடைய பழக்கம் பாலமுருகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் பாலமுருகன், மனைவி கார்த்திகாவை மணிகண்டனுடன் பழக கூடாது என்று கண்டித்து அடித்துள்ளார். மேலும் குழந்தை பிரித்வி தனக்கு பிறக்கவில்லை என்று தகராறு செய்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 1½ மாதங்களாக கார்த்திகா கணவனை பிரிந்து மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பாலமுருகன், அவரது தந்தை சுப்பிரமணி மற்றும் பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோருடன் வந்து, மணி கண்டனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை வயிறு மற்றும் பல்வேறு இடத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த மணிகண்டனை கார்த்திகா மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலமுருகனை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதை யடுத்து போலீசார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.
    • இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.

    இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்ற, பயனாளிகளின் புத்த கங்களை சரிபார்த்த உஷா என்ற பெண் காசாளர், ஒவ்வொரு பயனாளிகளிடம் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார்.

    பணம் தராதவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதோடு, ஒரு மூதாட்டி 30 ரூபாய் வழங்கிய நிலையில் அவரிடம் நோட்டு சரி இல்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை அங்கிருந்து இளைஞர்கள் வீடியோவாக பதிவிட்டு வெளியிட் டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே வங்கி ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூகநிலைத்துறை அதிகாரிகள் வங்கியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    • சேலம் அருகே சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியிaல் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
    • இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் அருகே சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியிaல் கந்தசாமி என்ப வர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமியின் மகன் சதீஷ்குமார், நடேசன், பானுமதி ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.

    எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா, வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை (வயது 46),

    பிருந்தா (29) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பிர பாகரன், மோகனா, மகேஸ்வரி ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு மணி மேக லையும், நேற்று மதியம் பிருந்தாவும் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந்த னர்.வசந்தாவுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

    இதன் மூலம் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேரும் பலியாகி உள்ளனர்.

    • வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர்.

    சேலம், ஜூன்.12-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி கடந்த 9-ந்தேதி வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ெதாடர்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ×