என் மலர்
சேலம்
- ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழை வாயில் பகுதியில் ஏதாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- வீட்டில் இருக்கும் முதியோர்களிடம், இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்கவோ, வீட்டுக்குள் அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்தரகவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயா (வயது 78). இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்தனர்.
தண்ணீர் எடுக்க விஜயா சென்றபோது, திடீரென அவரது வாயை பொத்திய இருவரும், விஜயாவை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயின், வளையல்கள் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார்.
இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார், தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழை வாயில் பகுதியில் ஏதாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னுக்குப்பின் முரணாக அந்த நபர் பதில் அளித்ததை தொடர்ந்து, அவரையும் அவருடன் வந்த பெண்ணையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் திருமலை பட்டுவை சேர்ந்த சுப்பன் மகன் சுபாஷ் என்பதும், அவருடன் வந்த பெண் சுபாஷின் சித்தியான, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி மோனிஷா என்பதும் தெரிய வந்தது.
இவர்கள்தான் விஜயாவிடம் நகை பறித்தது தெரிய வந்தது. இவர்கள் கோவையில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு புத்தரகவுண்டன்பாளையம் வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் பானிபூரி கடை வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி கூறும்போது, மூதாட்டி விஜயா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு, தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வாகன தணிக்கையின்போது இருவரும் சிக்கினர்.
வீட்டில் இருக்கும் முதியோர்களிடம், இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்கவோ, வீட்டுக்குள் அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
வெளியூர் செல்வதாக இருந்தால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நகைகள் இருந்தால் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சி லிங்
- 14-ந்தே திக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீ யரிங் மாணவர் சேர்க்கை
சேலம்:
தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சி லிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூ ரிகளை வருகிற 14-ந்தே திக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீ யரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.
- வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்
- 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.
சேலம்:
சேலம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, அவர்கள் கூறியதாவது:-
கீரிப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்டவை அடங்கிய மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட உள்ளதாக கூறினார்.மேலும் அதற்கு பணம் வழங்கினால் அதிக வட்டி தருவதாகவும் கூறி, இப்ப குதியை சேர்ந்தவர்களிடம் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என 40 பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை வாங்கிக் கொண்டு, 2, 3 மாதங்களுக்கு வட்டி மட்டும் கொடுத்து வந்தார்.
ஆனால் அதன் பிறகு வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து செல்வத்திடம் கேட்டபோது தந்து விடுகிறேன் என சொல்லிக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.எனவே இது குறித்து எஸ்.பி. அலுவ லகம் மற்றும் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தலைமறைவான நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இமயன் (வயது 36). இவருக்கு திருமணமாகி ராஜப்பிரியா (27) என்ற மனைவி உள்ளார்.
- இமயனுக்கு சரியான வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் அடிக்கடி வருத்தப்பட்டு கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் குகை ஆண்டிப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் இமயன் (வயது 36). இவருக்கு திருமணமாகி ராஜப்பிரியா (27) என்ற மனைவி உள்ளார். இமயனுக்கு சரியான வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் அடிக்கடி வருத்தப்பட்டு கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த இமயன் மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணி
- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகை
சேலம்:
சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதி களில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளனர்.
முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெற லாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை யளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவ ரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய வுள்ள தொழில் நிறுவ னங்க ளும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகா மில் கலந்துகொண்டு பயன டையுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பயோ டெக் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- தாய், தோல்வியுற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுமாறு அருண்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பயோ டெக் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது.
இதனால் அவரது தாய், தோல்வியுற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுமாறு அருண்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த அருண்குமார் இன்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். முன்னதாக தனது நண்பர்கள் 2 பேருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என தகவல் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அருண்குமார், அறை கதவை பூட்டி சேலையை கழுத்தில் கட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
நண்பர்கள், உடனடியாக கதவை உடைத்து, உள்ளே புகுந்து அவரை காப்பாற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சரியான நேரத்தில் நண்பர்கள் துரிதமாக செயல்பட்டதால் மாணவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு
- 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்தது
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி 75 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கையுடன் கடந்த 1990-ல் பயன்பாடுக்கு வந்தது. அப்போதைய இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, உரிமம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் வழங்கி வந்தது.
இந்த நிலையில், 2013 -ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியதோடு, 3 ஆண்டுக்கான ஆய்வு 2018-ல் 5 ஆண்டாக மாற்றியமைக்கப்பட்டது. அதே நேரம், இந்திய மருத்துவ கழகம், தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி 5 ஆண்டுக்கான ஆய்வு, கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில் அதற்கு முன்னதாகவே, தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கையை பெற்ற ஆணையம், 2028 -ம் ஆண்டு மார்ச் வரை, 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து, உத்தரவிட்டுள்ளது.
- ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது
- ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது
சேலம்:
சேலம் மாநகர பிரதான பகுதிகளில் நவீன கண்கா ணிப்பு காமிராக்களை சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டது. தனியார் துறையினரும் ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது. மேலும் கண்காணிப்பு காமிராவை பயன்படுத்தி நிறைய குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பராமரிக்கவில்லை
குற்றங்களை கட்டுப்ப டுத்துவது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விதி மீறல்கள் என முக்கிய நட வடிக்கைகளை கையாளு வதில் மூலைமுடுக்குகளில் நிறுவப்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால் காலப்போக்கில் கண்கா ணிப்பு காமிராக்களை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, பெரும்பான்மையான காமிராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.
சேலம் மாநகரின், 17 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அரசின் சார்பில், 2,030 காமிராக்கள், தனியார் பங்களிப்புடன் பொது இடங்களில் போலீசாரால், 19,423 காமிராக்கள் என மொத்தம், 21,453 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காமிராக்கள் 3-வது கண்ணாக இருந்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், சேலம் மாநக ரத்தில் 5,000 காமிராக்களை நிறுவ போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
2,525 காமிராக்கள் செயல்படவில்லை
இந்நிலையில், சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில், 8 இடங்களில் கார்களின் கண்ணாடியை உடைத்து நடந்த திருட்டு, 5 கொலை சம்பவங்கள் நடந்த இடங் கள், திருட்டு, வழிப்பறி, கொள்ளை நடந்த இடங்க ளில் அமைக்கப்பட்டுள்ள காமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 2,525 காமிராக்கள் கடந்த 6 மாதங்களாக செயல் படாமல் இருப்பதும், 525 காமிராக்கள் பதிவுகளை சேமிக்கும் திறனை இழந்து இருப்பதும் தெரிய வந்தது.
இதனால், குற்றவாளி களை கைது செய்ய முடியா மல், குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.
நோட்டமிட்டு...
கண்காணிப்பு காமி ராக்கள் செயல்பாட்டில் இல்லாத இடங்களில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காமிராக்கள் இயங்காத இடங்களை நோட்டமிட்டு குற்றச் செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் காவல்துறை யினரிடம் சிக்காமல் அவர்கள் எளிதாக தப்பிச் செல்கின்றனர்.
அதிர்ச்சி
இது குறித்து, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியின் பார்வைக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
கண்காணிப்பு காமிராக்கள் செயல் படாத தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த கமிஷனர் , இந்தப் பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய உத்தர விட்டுள்ளார்.
எனவே பழுதான சி.சி.டி.வி.காமிராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், முக்கிய கடைவீதி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிதாக சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தவும் அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
- நேற்று காலை காரிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (வயது 31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் இருவரையும் ராமன் திருப்பூருக்கு அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்.
படுகொலை
இந்த நிலையில் கூலி வேலை செய்து, தனியாக வசித்து வந்த சசிகலா, நேற்று காலை காரிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்கு ரத்தக்கறையுடன் உடைந்த மதுபாட்டில் உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி, கைரேகைகளை சேகரித்து ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் சென்று தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திடுக்கிடும் தகவல்
விசாரணையில் திடுக்கி டும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
சசிகலாவின் கணவர் ராமன் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ேவலை செய்யும் இடத்தில் பெயிண்டிங் தொழிலாளி பிரபு (38) என்பவருடன் ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகினர்.
இந்த பழக்கத்தின் அடிப்படையில் பிரபு, அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடை வில் தகாத தொடர்பு உருவானதாக கூறப்படு கிறது. இதையடுத்து இருவ ருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கொலை நடந்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
பெயிண்டரிடம் அதிரடி விசாரணை
அதன்பேரில் காரிப்பட்டி போலீசார், ெகாலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பெயிண்டர் பிரபுவை பிடித்து போலீஸ் நிலை யத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் பதிவான அழைப்பு கள், உரையாடல்கள் என்ன என்பது பற்றி கண்டறியும் நடவடிக்கையில் சைபர்கி ரைம் போலீசார் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். மதுபாட்டிலில் பதிவான கைரேகையை, பிரபு கைரே கையுடன் ஒப்பிடும் நடவ டிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இளம்பெண் கொலையில் வேறு யாருக்கா வது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
- கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
சேலம்:
தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை வருகிற 14-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
- நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி பகலில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. அதன் பின்னர் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்ந்தது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரிரு நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.
கோடையின் உக்கிரமாக காலமான அக்னி நட்சத்திரத்துக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்ட வேளையில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பது, மக்களை கவலையடைய செய்துள்ளது.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:-
சேலத்தில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியதால், அனல் காற்று வீசிய நிலையில் அதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையிலும் மழை பெய்யாமல் உள்ளது. சேலத்தில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இன்றும் காலை முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.
தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் அவ்வப்போது குடிநீர் அருந்த வேண்டும். வெயிலில் உலாவ விடக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
- அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
சேலம்:
சேலம் மாமாங்கம் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி விஜயா (வயது 53), மாளிகை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து விஜயா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டிவி காமிராவை ஆய்வு செய்தனர். அதில், வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது.
அதனை வைத்து விசாரித்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த விஜயகுமாருடையது என்பதும், அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என ஏற்கனவே பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதும் தெரியவந்தது.
விஜயகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்த அந்த வாலிபர், விஜயாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






