என் மலர்
சேலம்
- கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.
- சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்கா ணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதா வது:-
கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.
எனவே பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமான குறை கள் இருப்பின் புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரில் அல்லது முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவல கத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
- பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதில் வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுக ளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைக ளின் நவீன தொழில்நுட்பத் திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள டெக்னா லஜி சென்டர் 40-ல் மானு பாக்சரிங் பிராசஸ் கண்ட் ரோல் அண்ட் ஆட்டோ மேசன், இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மானுபாக்சரிங், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பி லும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான் றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.
பயிற்சி பெறும் மாண வர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களின் மூலம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரப்படும்.
இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க தேதி வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.
- மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில், பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.3 அடி சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த அளவிலே உள்ளது.
நேற்று முன்தினம் 579 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 465 கனஅடியாக சரிந்தது. இன்று சற்று அதிகரித்து 522 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில், பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கடந்த 13-ந் தேதி 102.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று 102.22 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 101.58 அடியானது.
இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.3 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன்.
- பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மனுக்களை தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 23-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். மனுதாக்கலின் முதல் நாளான நேற்று தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் 235-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் எந்த மூலையில் தேர்தல் நடைபெற்றாலும், அங்கு சென்று மனு தாக்கல் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 1988-ல் தொடங்கிய எனது தேர்தல் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், பிரதமர் நரேந்திமோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் மட்டும் இன்றி முன்னாள் முதல்வர்கள் பலருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன்.
தேர்தலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். பணம், செல்வாக்கு இருப்பவர் மட்டும் தேர்தலில் நிற்க முடியும் என்பது தவறானது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன். இதுவரை ரூ.1 கோடி வரை டெபாசிட் பணத்தை இழந்துள்ளேன். நான் கட்டிய பணம் ஒன்றிய அரசு கருவூலத்திற்கு சென்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
- இதையடுத்து ஏட்டுக்கள் அசோக்குமார், இசையரசு ஆகியோர் இன்று காலை பொம்மிடி முதல் சேலம் வரை ரெயிலில் சோதனை செய்தனர்.
சேலம்:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஏட்டுக்கள் அசோக்குமார், இசையரசு ஆகியோர் இன்று காலை பொம்மிடி முதல் சேலம் வரை ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது எஸ் 4 கோச், 74-வது சீட்டுக்கு அடியில் இருந்த ஷோல்டர் பேக் மற்றும் ட்ராவல் பேக் ஆகிய 2 பேக்குகளை சோதனை செய்தனர். அதில், சுமார் 19 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர்.
அதனை கொண்டு வந்த திருச்சி ராம்ஜி நகர் பகுதியை விமலா என்ப வரை விசாரித்ததில், அவர் விஜயவாடாவில் இருந்து ஈரோடு வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து தெரியவந்தது. தொடர் விசாரணையில், விமலா மீது எடமலை பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், மேல் நடவடிக்கைக்காக சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
- சசிகலா நேற்று முன்தினம் மகாலிங்கம் நகர் வீட்டுமனை காலி இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- சசிகலாவின் கணவர் ராமன் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 31). கணவநமனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மகன், மகள் ராமனுடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிக்கின்றனர். சசிகலா மட்டும் தனியாக காரிப்பட்டியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சசிகலா நேற்று முன்தினம் காரிப்பட்டி மகாலிங்கம் நகர் வீட்டுமனை காலி இடத்தில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். காரிப்பட்டி போலீசார், உடலை மீட்டு ரத்தக்கறையுடன் கிடந்த மதுபாட்டிலை கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்து கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக சசிகலாவின் கணவர் ராமன் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் பிரபு என்பவர் மீது சந்தேகம் உள்ளது. அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலை செய்து வந்த இடத்தில் ராமனுக்கு, பெயிண்டிங் தொழிலாளி பிரபு (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகினர்.
இந்த பழக்கத்தின் அடிப்படையில் பிரபு, அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளாடைவில் கள்ளத் தொடர்பாக மாறியது. சசிகலா தனியாக வசித்து வந்த நிலையில் கள்ளக்காதலன் பிரபு அவரை செய்திருக்கலாம் என போலீசார் எண்ணினார்.
இதனால் போலீசார் சந்தேகத்தின்பேரில், பிரபுவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனில் பதிவான அழைப்புகள், உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் , மதுபாட்டிலில் பதிவான கைரேகையை, பிரபு கைரேகையுடன் ஒப்பிடும் நடவடிக்கையில் கைரேகை நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில், மது பாட்டிலில் பதிவான கைரேகை, சசிகலாவின் கணவர் ராமனுடைய கைரேகை என்பது உறுதியானது. இதனால் பிரபு, இந்த கொலைைய செய்யவில்லை என போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், ராமனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சசிகலாவை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல ராமன் கடந்த 11-ந்தேதி இரவு காரிப்பட்டிக்கு வந்தார். அப்போது சசிகலா, பிரபுவை விட்டு பிரியமனமின்றி ராமனுடன் செல்ல மறுத்தார். இதனால் சசிகலாவை கல்லால் தாக்கி, மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு, பிரபு மீது புகார் கொடுத்து நாடகமாடியது தெரியவந்தது.
இந்த கொலைக்கு காரிப்பட்டி கருமாபுரத்தை சேர்ந்த ஹரி (25) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். ராமனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் சம்பவத்தன்று ராமனை தனது மோட்டார் சைக்கிளில் மகாலிங்கம் நகர் வீட்டுமனை பகுதிக்கு ஹரி அழைத்து வந்து உதவியுள்ளார். சசிகலா கொலை செய்து விட்டு, ராமன் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, சசிகலாவின் கணவர் ராமன், கொலைக்கு உதவி செய்த ஹரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது.
அடம்பிடித்து அழுதனர்
அப்போது ஒரு சில குழந்தைகள் பெற்றோர் வண்டியில் இருந்து இறக்கி விடும் போது பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்து அழுதனர்.
இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப் பட்டதால் 4 ரோடு, கோட்டை, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், திருவாகவுண்டனூர், ராமகிருஷ்ணா சாலை, குகை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பள்ளிகள் திறக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பள்ளியின் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா னார்கள் என்றனர்.
- வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
- இந்த மூலிகைத் தாவரம் பெரிய மரமாக வளர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக காய்த்து கனிந்து வருகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராம ரிக்கபப்ட்டு வருகிறது. இந்த தோட்டத்தில் 10 ஆண்டுக்கு முன் பணிபுரிந்த சித்த மருத்துவர் செல்வக்குமார், 'கார்டியா டொகோடோமா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட மருத்துவ குணம் கொண்ட சிறு மரவகை மூலிகையான 'நறுவல்லி' தாவரத்தை சதுரகிரி மலைப்பகுதியில் இருந்து கொண்டுவந்து நட்டுள்ளார். இந்த மூலிகைத் தாவரம் பெரிய மரமாக வளர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக காய்த்து கனிந்து வருகிறது.
நறுவல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகும். இளம் வயதினரின் முகப்ப ருக்களை இலைச்சாறு போக்கும். இலையை அரைத்து வெண்ணையுடன் சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கலும், மூலநோயும் குணமாகும்.
மரப்பட்டைச் சாறுடன், தேங்காய்ப்பால் சேர்த்து பருகினால் கடுமையான வயிற்று வலியும் குறையும். பட்டை, கொட்டையின் பொடி, பித்தம், அக்கி, குடற்புண், சிறுநீர் குழாய் நோய்களை தீர்க்கும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காய்க்கும் பசை போன்ற திரவத்துடனும் துவர்ப்பு கலந்த இனிப்பு சுவையுடைய நறுவல்லி பழங்களுக்கு, ஆண்மையை அதிகரித்து உடலை உறுதியாக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.
வாழப்பாடி அரசு மருத்துவமனை மூலிகைத் தோட்டத்திலுள்ள நறுவல்லி மரத்தில் தற்போது கொத்து கொத்தாக பழங்கள் கனிந்துள்ளன. இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் பறித்து உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி முயல் நகரை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 38). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் அணிதிருந்த நகையை மர்ம நபர் ஒருவரை பறிக்க முயன்றார். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாபிரியாவிடம் நகையை பறிக்க முயன்றது கன்னங்குறிச்சி அய்யர் காலனியை சேர்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற விஜய்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் உத்தரவிட்டார்.
- இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார்.
- இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம் பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தன் (வயது 59). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.
நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் விஷம் குடித்த நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இன்று அவரது உடல் பிரேதபரி சோதனைக்கு பின் உறவின ர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன.
- இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோ விலில் பஞ்ச பாண்டவர்க ளான தருமர், பீமன், அர்ஜூ னன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிரா மத்தில் கோவில் திரு விழாக்கள் நடத்துவதில் 2 கிராம மக்களிடையே முன் னோர்கள் கலந் தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்ப தும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி களையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி திரவுபதி யம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 23–-ந் தேதி வெகுசிறப்பாக நடை பெற்றது. இதனைத்தெ ாடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். வருகிற 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யா ணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், 29, 30-ந்தேதி களில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனையொட்டி தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத் தோடு, 3 கி.மீ தொலை விலுள்ள வாழப்பாடி திரவு பதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தபடி மன்னா யக்கன்பட்டி மாரி யம்மன் கோயிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றனர்.
இந்த ஊர்வலத்தை வழி நெடுக திரண்டு நின்று கண்டுகளித்த 2 கிராம மக்களும் தாம்பூலம் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்த னர். இதை தொடர்ந்து சாமிகளை மாரியம்மன் கோவில் வைத்து, தொடர்ந்து 18 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி விருந்து படைக்க உள்ளனர். தேர்திருவிழா நடத்தி கொண்டாடி நிறைவு செய்ததும், மீண்டும் திரவுபதி அம்மன் கோவி லுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிவு செய்துள்ள னர். தேர்திருவிழாவின் போது, வாழப்பாடி கோவில் நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அருகருகே உள்ள 2 கிரா மங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன் ஆகியோர் கூறுகையில், வாழப்பாடிக்கும், மன்னா யக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகதான் இந்த பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது என்றனர்.
- காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அணைக்கான நீர்வரத்தும் குறைவாக உள்ளது.
- நேற்று வினாடிக்கு 579 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 465 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு, நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நேற்று 102.86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.22 அடியாக சரிந்தது.
மேலும், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அணைக்கான நீர்வரத்தும் குறைவாக உள்ளது. நேற்று வினாடிக்கு 579 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 465 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.






