search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் வீட்டு விருந்துக்கு சென்ற சாமிகள் 3 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து  சென்ற கிராம மக்கள்
    X

    வாழப்பாடி அக்ரஹாரத்தில் இருந்து சுவாமி சிலைகளை தோளில் சுமந்தபடி விருந்துக்கு அழைத்து சென்ற மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள்.

    பெண் வீட்டு விருந்துக்கு சென்ற சாமிகள் 3 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன.
    • இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோ விலில் பஞ்ச பாண்டவர்க ளான தருமர், பீமன், அர்ஜூ னன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிரா மத்தில் கோவில் திரு விழாக்கள் நடத்துவதில் 2 கிராம மக்களிடையே முன் னோர்கள் கலந் தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்ப தும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி களையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதி யம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 23–-ந் தேதி வெகுசிறப்பாக நடை பெற்றது. இதனைத்தெ ாடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். வருகிற 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யா ணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், 29, 30-ந்தேதி களில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதனையொட்டி தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத் தோடு, 3 கி.மீ தொலை விலுள்ள வாழப்பாடி திரவு பதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தபடி மன்னா யக்கன்பட்டி மாரி யம்மன் கோயிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை வழி நெடுக திரண்டு நின்று கண்டுகளித்த 2 கிராம மக்களும் தாம்பூலம் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்த னர். இதை தொடர்ந்து சாமிகளை மாரியம்மன் கோவில் வைத்து, தொடர்ந்து 18 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி விருந்து படைக்க உள்ளனர். தேர்திருவிழா நடத்தி கொண்டாடி நிறைவு செய்ததும், மீண்டும் திரவுபதி அம்மன் கோவி லுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிவு செய்துள்ள னர். தேர்திருவிழாவின் போது, வாழப்பாடி கோவில் நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பி வைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அருகருகே உள்ள 2 கிரா மங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன் ஆகியோர் கூறுகையில், வாழப்பாடிக்கும், மன்னா யக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகதான் இந்த பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது என்றனர்.

    Next Story
    ×