என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாட்களில் 1 அடி சரிவு
- மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில், பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.3 அடி சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த அளவிலே உள்ளது.
நேற்று முன்தினம் 579 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 465 கனஅடியாக சரிந்தது. இன்று சற்று அதிகரித்து 522 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில், பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கடந்த 13-ந் தேதி 102.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று 102.22 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 101.58 அடியானது.
இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.3 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






