என் மலர்tooltip icon

    சேலம்

    • விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்.
    • இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்.

    வருடந்தோறும் ரூ.6 ஆயிரம்

    இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு 4 மாதங்க ளுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயி களுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி 13-வது தொகை பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிலையில் வருகிற ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெற உள்ளனர்.

    இது குறித்து சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப் படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது.

    இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் இருந்து ரூ.1.86 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினர் பயனடைந்துள்ளனர். இதில் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.57,628 கோடி பெற்றுள்ளனர்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜருகுமலையில் உள்ள மேலூர், கீழூர் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
    • கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் ஜருகுமலை உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் போலீஸ், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவிகள் பெற முடியவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலையில் உள்ள மேலூர், கீழூர் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் ஜருகுமலை உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் போலீஸ், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவிகள் பெற முடியவில்லை.

    பள்ளி, கல்லுாரி மாணவியர், போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிபட்டு வந்தனர்.

    இதையடுத்து மேலூரில், பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை குழு உறுப்பி னர் தங்கராஜ் கூறுகையில், ஜருகுமலை, அதன் அடி வாரத்தில் உள்ள நில வாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக் கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்க வில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஜருகு மலையில் செல்போன் கோபுரம் அமைத்தால் சிக்னல் கிடைக்கும் என பார்த்திபன் எம்.பி.யும் பரிந்துரைத்தார்.

    அதன்படி செல்போன் கோபுரம் அமைக்கப்படு கிறது என்றார்.

    • விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது.
    • சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை பூட்டி அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    மேலும் வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கார்த்திக், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

    இந்த வழக்கு இன்று பிற்பகல் சேலம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வன்னியர் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் கோர்ட்டில் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் காலை முதலே சேலம் கோர்ட்டில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கோர்ட்டுக்குள் செல்லும் வாகனங்களும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டன. இதனால் கோர்ட் வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, இவரது மனைவி ருக்மணி ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • வயதான நிலையில் எங்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற எந்த வித வசதியும் இல்லாமல் வீதியில் தவித்து வருகிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, இவரது மனைவி ருக்மணி ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள், மறைத்து வைத்து கொண்டு வந்த மண்ணெண்னை கேனை எடுத்து தலையில் ஊற்ற முயன்றபோது, போலீசார் தடுத்து கேனை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, பழனிச்சாமி கூறும்போது, நாச்சிளாம்பட்டி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் உள்ளது. இதை எனது மகன் குமார் எங்களுக்கு தெரியாமல் கையெழுத்து போட்டு அபகரித்துக் கொண்டார்.

    மேலும் என்னையும் எனது மனைவியையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார். வயதான நிலையில் எங்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற எந்த வித வசதியும் இல்லாமல் வீதியில் தவித்து வருகிறோம். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மகன் மீது நடவடிக்கை எடுத்து, எனது நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என மன வேதனையுடன் தெரிவித்தார்

    • ரெயில்வே துறை சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • இதன் ஒரு பகுதியாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச ரெயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    சேலம்:

    ரெயில்வே கிராசிங்கு களை பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும் வகையில் ரெயில்வே துறை சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச ரெயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி, ரெயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தினை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், லெவல் கிராசிங் பகுதிகளில் விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் இன்று சேலம் - விருத்தாச்சலம் ரெயில் வழித்தடத்தில் அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் வாகனம் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    நாளை சேலம் - கரூர் ரெயில் வழித்தடத்திலும், இதே போன்ற நிகழ்வு அனைத்து ரெயில்வே லெவல் கிராசிங்குகளிலும் நடைபெற உள்ளது. மேலும் பாதுகாப்பாக ெரயில்வே கிராசிங்களைக் கடக்க வீதி நாடகம் மூலமாகவும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் ரெயில்வே கோட்ட பாது காப்பு அலுவலர் தட்சிணா மூர்த்தி மற்றும் ரெயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சங்ககிரி, சேலம் மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சங்ககிரி, சேலம் மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரி பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலம் 10.5, எடப்பாடி 2.2 என மாவட்டம் முழுவதும் 23.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.

    • கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன்.
    • இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கோணமடுவு, குரால்நத்தம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காவல்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துவிட்டு குப்புசாமி கூறியதாவது:-

    கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    இது குறித்து நாகராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியாமல், வாழ முடியாமல் தவித்து வருகிறோம். நாகராஜ் என்பவரால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

    இது குறித்து பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது.
    • தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உட்பட பல திருவிழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும்.

    இது தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல ஒவ்வொரு அமாவாசை நாட்களில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    தமிழக பக்தர்கள் மாதேஸ்வர மலைக்கு எளிதாக செல்வதற்காக ஒவ்வொரு அமாவாசை களிலும், சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வரும் 17-ந் தேதி ஆனி மாத அமா வாசையை முன்னிட்டு, அன்று அதிகாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையம், தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32), கல் உடைக்கும் தொழிலாளி.
    • மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32), கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பவித்ராவையும் அவரது 1½ வயது பெண் குழந்தையும் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டு ஓட்டம்பிடித்தார். இதுபற்றி மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    இதை அறிந்த கோபி மற்றும் பவித்ரா ஆகியோர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அஜராகினர். போலீசார் பவித்ராவுக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லுமாறு கூறினர். அதற்கு பவித்ரா தனது கணவருடன் செல்ல மருத்துவிட்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இத னிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கோபி மற்றும் மாதேஷ் குடும்பத்தாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி கோபியை மாதேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி கோபியின் தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், நாகராஜ், மணி, வெங்கடேஷ், பெரியசாமி, விஜயா, இருசம்மாள் ஆகிய 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது.
    • மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது. உ இதுபற்றி ராஜேந்தி ரன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி கள் உதவி மாவட்ட அலுவ லர் சிவக்குமார் தலைமை யில் வீரர்கள் பிரதாப், திருப்பதி, திலீப்குமார், கலை யரசன், ஜெய்ரஞ்சித்குமார், உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    • சேலம் மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலை ஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
    • சேலம்-636302 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தே திக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் சேலம் மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலை ஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை சுடர்மணி விருதும். 51 முதல் 65 வய திற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேலும், வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்ப டையில் தேர்ந்தெடுக்கப்ப டும் 30 சிறந்த கலைஞர்க ளுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம். கும்மி கோலாட்டம், மயி லாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண் டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம். ஆழியாட்டம், கைச்சிலம் பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வி யல் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்க ளிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.

    சேலம் மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருது களைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் மேற்கண்ட விருதுகள் பெறு வதற்கான விண்ணப்பத்து டன் வயதுச் சான்று, முக வரிச் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம் (3) மற்றும் கலை அனு பவச் சான்றுகளின் நகல்கள் தொலைபேசி எண்ணுடன் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், ஆவின் பால்பண்ணை எதி ரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தே திக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • சேலம் அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் காவேரி ஆர்.எஸ். க்கும் இடையே ரெயிலில் அடி பட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த கிடந்தார்.
    • உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடை யாளம் தெரியவில்லை.

    சேலம்:

    சேலம் அருகே ஆனங்கூர் ரெயில் நிலையத்துக்கும் காவேரி ஆர்.எஸ். க்கும் இடையே ரெயிலில் அடி பட்டு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த கிடந்தார். உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடை யாளம் தெரியவில்லை.

    மாநிறத்தில் உள்ள அவர் கருப்பு கலர் லுங்கி, காப்பி கலரில் முழுக்கை சட்டை அணிந்து உள்ளார். வலது பக்க இடுப்பில் கருப்பு மச்சம், வலது மார்பு பகுதி யின் கீழே மச்சம் உள்ளன.

    அவர் இறந்து கிடந்த இடம் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×