என் மலர்
நீங்கள் தேடியது "Awareness Day"
- ரெயில்வே துறை சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- இதன் ஒரு பகுதியாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச ரெயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
சேலம்:
ரெயில்வே கிராசிங்கு களை பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும் வகையில் ரெயில்வே துறை சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச ரெயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, ரெயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தினை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், லெவல் கிராசிங் பகுதிகளில் விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் இன்று சேலம் - விருத்தாச்சலம் ரெயில் வழித்தடத்தில் அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் வாகனம் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
நாளை சேலம் - கரூர் ரெயில் வழித்தடத்திலும், இதே போன்ற நிகழ்வு அனைத்து ரெயில்வே லெவல் கிராசிங்குகளிலும் நடைபெற உள்ளது. மேலும் பாதுகாப்பாக ெரயில்வே கிராசிங்களைக் கடக்க வீதி நாடகம் மூலமாகவும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் ரெயில்வே கோட்ட பாது காப்பு அலுவலர் தட்சிணா மூர்த்தி மற்றும் ரெயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்






