தற்கொலைக்கு முயன்ற மாணவரை காப்பாற்றிய நண்பர்கள்

சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பயோ டெக் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.தாய், தோல்வியுற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுமாறு அருண்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.
தற்கொலைக்கு முயன்ற மாணவரை காப்பாற்றிய நண்பர்கள்
Published on

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பயோ டெக் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது.

இதனால் அவரது தாய், தோல்வியுற்ற பாடங்களை படித்து தேர்ச்சி பெறுமாறு அருண்குமாரை சத்தம் போட்டதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த அருண்குமார் இன்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். முன்னதாக தனது நண்பர்கள் 2 பேருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என தகவல் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அருண்குமார், அறை கதவை பூட்டி சேலையை கழுத்தில் கட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

நண்பர்கள், உடனடியாக கதவை உடைத்து, உள்ளே புகுந்து அவரை காப்பாற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சரியான நேரத்தில் நண்பர்கள் துரிதமாக செயல்பட்டதால் மாணவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com