search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் குறையாத வெயிலின் தாக்கம்
    X

    சேலம் மாவட்டத்தில் குறையாத வெயிலின் தாக்கம்

    • சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
    • நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி பகலில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. அதன் பின்னர் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்ந்தது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரிரு நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    கோடையின் உக்கிரமாக காலமான அக்னி நட்சத்திரத்துக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்ட வேளையில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பது, மக்களை கவலையடைய செய்துள்ளது.

    இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    சேலத்தில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியதால், அனல் காற்று வீசிய நிலையில் அதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையிலும் மழை பெய்யாமல் உள்ளது. சேலத்தில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இன்றும் காலை முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.

    தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் அவ்வப்போது குடிநீர் அருந்த வேண்டும். வெயிலில் உலாவ விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×