என் மலர்
நீங்கள் தேடியது "நடவடிக்கை எடுக்க கோரி பணத்தை இழந்தவர்கள் மனு Those who have lost money petition to take action"
- வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்
- 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.
சேலம்:
சேலம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, அவர்கள் கூறியதாவது:-
கீரிப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்டவை அடங்கிய மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட உள்ளதாக கூறினார்.மேலும் அதற்கு பணம் வழங்கினால் அதிக வட்டி தருவதாகவும் கூறி, இப்ப குதியை சேர்ந்தவர்களிடம் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என 40 பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை வாங்கிக் கொண்டு, 2, 3 மாதங்களுக்கு வட்டி மட்டும் கொடுத்து வந்தார்.
ஆனால் அதன் பிறகு வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து செல்வத்திடம் கேட்டபோது தந்து விடுகிறேன் என சொல்லிக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.எனவே இது குறித்து எஸ்.பி. அலுவ லகம் மற்றும் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தலைமறைவான நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






