என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து ஆய்வு Follow-up study at Salem Government Medical College"

    • இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு
    • 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்தது

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவக்கல்லூரி 75 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கையுடன் கடந்த 1990-ல் பயன்பாடுக்கு வந்தது. அப்போதைய இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, உரிமம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் வழங்கி வந்தது.

    இந்த நிலையில், 2013 -ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியதோடு, 3 ஆண்டுக்கான ஆய்வு 2018-ல் 5 ஆண்டாக மாற்றியமைக்கப்பட்டது. அதே நேரம், இந்திய மருத்துவ கழகம், தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டது.

    அதன்படி 5 ஆண்டுக்கான ஆய்வு, கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில் அதற்கு முன்னதாகவே, தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கையை பெற்ற ஆணையம், 2028 -ம் ஆண்டு மார்ச் வரை, 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து, உத்தரவிட்டுள்ளது.

    • முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணி
    • வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகை

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதி களில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

    முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெற லாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை யளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவ ரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய வுள்ள தொழில் நிறுவ னங்க ளும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகா மில் கலந்துகொண்டு பயன டையுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்
    • 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.

    சேலம்:

    சேலம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, அவர்கள் கூறியதாவது:-

    கீரிப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்டவை அடங்கிய மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட உள்ளதாக கூறினார்.மேலும் அதற்கு பணம் வழங்கினால் அதிக வட்டி தருவதாகவும் கூறி, இப்ப குதியை சேர்ந்தவர்களிடம் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என 40 பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை வாங்கிக் கொண்டு, 2, 3 மாதங்களுக்கு வட்டி மட்டும் கொடுத்து வந்தார்.

    ஆனால் அதன் பிறகு வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து செல்வத்திடம் கேட்டபோது தந்து விடுகிறேன் என சொல்லிக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.எனவே இது குறித்து எஸ்.பி. அலுவ லகம் மற்றும் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தலைமறைவான நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    ×