மதுபாட்டிலால் குத்தி பெண் படுகொலை: பெயிண்டிங் தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை

தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.நேற்று காலை காரிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
சசிகலா
சசிகலா
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (வயது 31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் இருவரையும் ராமன் திருப்பூருக்கு அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்.

படுகொலை

இந்த நிலையில் கூலி வேலை செய்து, தனியாக வசித்து வந்த சசிகலா, நேற்று காலை காரிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அங்கு ரத்தக்கறையுடன் உடைந்த மதுபாட்டில் உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி, கைரேகைகளை சேகரித்து ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் சென்று தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திடுக்கிடும் தகவல்

விசாரணையில் திடுக்கி டும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

சசிகலாவின் கணவர் ராமன் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ேவலை செய்யும் இடத்தில் பெயிண்டிங் தொழிலாளி பிரபு (38) என்பவருடன் ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகினர்.

இந்த பழக்கத்தின் அடிப்படையில் பிரபு, அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடை வில் தகாத தொடர்பு உருவானதாக கூறப்படு கிறது. இதையடுத்து இருவ ருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கொலை நடந்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

பெயிண்டரிடம் அதிரடி விசாரணை

அதன்பேரில் காரிப்பட்டி போலீசார், ெகாலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பெயிண்டர் பிரபுவை பிடித்து போலீஸ் நிலை யத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் பதிவான அழைப்பு கள், உரையாடல்கள் என்ன என்பது பற்றி கண்டறியும் நடவடிக்கையில் சைபர்கி ரைம் போலீசார் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். மதுபாட்டிலில் பதிவான கைரேகையை, பிரபு கைரே கையுடன் ஒப்பிடும் நடவ டிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இளம்பெண் கொலையில் வேறு யாருக்கா வது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com