என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகர பகுதியில் செயல் இழந்த 3050 கண்காணிப்பு காமிராக்கள்
    X

    சேலம் மாநகர பகுதியில் செயல் இழந்த 3050 கண்காணிப்பு காமிராக்கள்

    • ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது
    • ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது

    சேலம்:

    சேலம் மாநகர பிரதான பகுதிகளில் நவீன கண்கா ணிப்பு காமிராக்களை சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டது. தனியார் துறையினரும் ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது. மேலும் கண்காணிப்பு காமிராவை பயன்படுத்தி நிறைய குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    பராமரிக்கவில்லை

    குற்றங்களை கட்டுப்ப டுத்துவது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விதி மீறல்கள் என முக்கிய நட வடிக்கைகளை கையாளு வதில் மூலைமுடுக்குகளில் நிறுவப்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால் காலப்போக்கில் கண்கா ணிப்பு காமிராக்களை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, பெரும்பான்மையான காமிராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.

    சேலம் மாநகரின், 17 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அரசின் சார்பில், 2,030 காமிராக்கள், தனியார் பங்களிப்புடன் பொது இடங்களில் போலீசாரால், 19,423 காமிராக்கள் என மொத்தம், 21,453 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காமிராக்கள் 3-வது கண்ணாக இருந்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    மேலும், சேலம் மாநக ரத்தில் 5,000 காமிராக்களை நிறுவ போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    2,525 காமிராக்கள் செயல்படவில்லை

    இந்நிலையில், சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில், 8 இடங்களில் கார்களின் கண்ணாடியை உடைத்து நடந்த திருட்டு, 5 கொலை சம்பவங்கள் நடந்த இடங் கள், திருட்டு, வழிப்பறி, கொள்ளை நடந்த இடங்க ளில் அமைக்கப்பட்டுள்ள காமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 2,525 காமிராக்கள் கடந்த 6 மாதங்களாக செயல் படாமல் இருப்பதும், 525 காமிராக்கள் பதிவுகளை சேமிக்கும் திறனை இழந்து இருப்பதும் தெரிய வந்தது.

    இதனால், குற்றவாளி களை கைது செய்ய முடியா மல், குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.

    நோட்டமிட்டு...

    கண்காணிப்பு காமி ராக்கள் செயல்பாட்டில் இல்லாத இடங்களில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காமிராக்கள் இயங்காத இடங்களை நோட்டமிட்டு குற்றச் செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் காவல்துறை யினரிடம் சிக்காமல் அவர்கள் எளிதாக தப்பிச் செல்கின்றனர்.

    அதிர்ச்சி

    இது குறித்து, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியின் பார்வைக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

    கண்காணிப்பு காமிராக்கள் செயல் படாத தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த கமிஷனர் , இந்தப் பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய உத்தர விட்டுள்ளார்.

    எனவே பழுதான சி.சி.டி.வி.காமிராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், முக்கிய கடைவீதி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிதாக சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தவும் அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×