முதியோர் உதவித்தொகை பயனாளிகளிடம் ரூ.50 வசூல் செய்த வங்கி ஊழியர்

சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர். இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
முதியோர் உதவித்தொகை பயனாளிகளிடம் ரூ.50 வசூல் செய்த வங்கி ஊழியர்
Published on

சேலம்:

சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.

இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்ற, பயனாளிகளின் புத்த கங்களை சரிபார்த்த உஷா என்ற பெண் காசாளர், ஒவ்வொரு பயனாளிகளிடம் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார்.

பணம் தராதவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதோடு, ஒரு மூதாட்டி 30 ரூபாய் வழங்கிய நிலையில் அவரிடம் நோட்டு சரி இல்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அங்கிருந்து இளைஞர்கள் வீடியோவாக பதிவிட்டு வெளியிட் டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே வங்கி ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூகநிலைத்துறை அதிகாரிகள் வங்கியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com