என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கத்தி குத்தில் காயமடைந்த மனைவியின் கள்ளக்காதலன் சாவு
- கடந்த 1½ மாதங்களாக கார்த்திகா கணவனை பிரிந்து மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
- கடந்த 7-ந் தேதி பாலமுருகன், அவரது தந்தை சுப்பிரமணி மற்றும் பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோருடன் வந்து, மணி கண்டனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
சேலம்:
சேலம் வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34). இவரது மனைவி கார்த்திகா (25). இவர்களுக்கு பிரித்வி (2) என்ற குழந்தை உள்ளது.
பாலமுருகன் டிரைவர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது நண்ப ரான, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36) என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் மணி கண்டன் அடிக்கடி பாலமுரு கன் வீட்டிற்கு வந்து சென்றார். இதனால் பால முருகன் மனைவி கார்த்தி காவும், மணிகண்டனும் பழகி வந்துள்ளனர்.
இவர்களுடைய பழக்கம் பாலமுருகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் பாலமுருகன், மனைவி கார்த்திகாவை மணிகண்டனுடன் பழக கூடாது என்று கண்டித்து அடித்துள்ளார். மேலும் குழந்தை பிரித்வி தனக்கு பிறக்கவில்லை என்று தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து கடந்த 1½ மாதங்களாக கார்த்திகா கணவனை பிரிந்து மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பாலமுருகன், அவரது தந்தை சுப்பிரமணி மற்றும் பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோருடன் வந்து, மணி கண்டனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை வயிறு மற்றும் பல்வேறு இடத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த மணிகண்டனை கார்த்திகா மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலமுருகனை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதை யடுத்து போலீசார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசா ரணை நடத்தி வருகின்றனர்.






