70 வயதை கடந்த பென்சன்தாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.
70 வயதை கடந்த பென்சன்தாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
Published on

சேலம்:

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வருதராஜன், பொருளா:ளர் ராணி உள்ளிட்ட நுஇர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.80-இல் இருந்து ரூ.150 ஆகவும், மருத்துவ காப்பீடு ரூ.300-இல் இருந்து ரூ.497 ஆகவும் உயர்த்தியுள்ளதை மாற்றி அமைக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com