என் மலர்
சேலம்
- நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது.
- சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.
இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- கன்யா சேலம் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழ கத்தில் தற்காலிக உதவி பேராசி ரியராக பணி புரிந்து வருகிறார்.
- மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிய சென்று விட்டனர்.
சேலம்
சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம் பட்டி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ சேகரன். இவரது மனைவி சுகன்யா (35), இவர் சேலம்
கருப்பூர் பெரியார் பல்கலைக்கழ கத்தில் தற்காலிக உதவி பேராசி ரியராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு 8 மணி யளவில் வழக்கம் போல பணி முடிந்து வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். மொபட் பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை திடீரென பறித்த னர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா கூச்ச லிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிய சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காமிரா பதிவுகளை வைத்து செயினை பறிதது சென்ற நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்தி ரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாடப்படு கிறது.
- தங்களை காண வரும் மகாபலி மன்ன னுக்காக அத்தப்பூ கோலம்போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
சேலம்
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்தி ரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாடப்படு கிறது.
மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடு கின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்ன னுக்காக அத்தப்பூ கோலம்போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
இதன் அடிப்படையில் சேலத்தின் பல்வேறு பகுதியில் வசிக்கும் கேரளா மாநில மக்கள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடினர். சேலம் சங்கர் நகர் பகுதி யில் உள்ள கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வண்ண, வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்து பூக்களைச் சுற்றிலும் நடன மாடி பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். மேலும் ஒருவருக்கு ஒரு வர் இனிப்பு களை பகிர்ந்து கொண்டு ஓணம் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டனர். இதுபோல சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓணம் பண்டிகை களைக்கட்டியது.
- ரேசன் கடையில் இருந்து 3 டன் அரிசியை கடத்தல்
- கடத்தலில் முக்கிய பங்கு வகித்த சாதிக்பாட்ஷாவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம்
சேலம் அம்மாப்பேட்டையில் கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா (வயது54). இவர் தலைமையிலான கும்பல் கடந்த 14-ந் தேதி செவ்வாய்ப்பேட்டை லைன்ரோடு கறி மார்க்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் இருந்து 3 டன் அரிசியை கடத்தியது. கடத்தலில் முக்கிய பங்கு வகித்த சாதிக்பாட்ஷாவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரேசன் அரிசியை கடத்திய தாக இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உணவுபொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாரதி சேலம் மாவட்ட இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் சேலம் மத்திய சிறையில் உள்ள சாதிக்பாட்ஷா விடம்வழங்கப்பட்டது.
- 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவரை பார்த்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
- ஆவேசம் அடைந்த அந்த மாணவர் 6-ம் வகுப்பு மாணவரின் சட்டை காலரை பிடித்து தூக்கி இழுத்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 25-ந்தேதி மதிய உணவு இடை வெளி யின்போது 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவரை பார்த்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர் 6-ம் வகுப்பு மாணவரின் சட்டை காலரை பிடித்து தூக்கி, ஆணில் மாட்டி தொங்க விடுவேன் என கூறி இழுத்துள்ளார். இதில் சட்டை இறுகி குரல் வளையை நெரித்துள்ளது. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் வந்ததால் அந்த மாணவரை விட்டு விட்டார். இதனை தொடர்ந்து 6-ம் வகுப்பு மாணவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பள்ளியில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், தாசில்தார் செம்மலை, மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2-வது நாளாக இன்று பள்ளிக்கு சென்று மாவட்ட முதன்ைம கல்வி அதிகாரி கபீர், மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- தாய் இறந்து விட்ட நிலையில் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
- நடராஜ் அவரது தாய்மாமன் ஏழுமலை (58) என்பவருடன் தங்கி கூலி செய்து வருகிறார்
சேலம்
சேலம் உத்தமசோழபுரம் பகுதிைய சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் நடராஜ் (28), இவரது தாய் இறந்து விட்ட நிலையில் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நடராஜ் அவரது தாய்மாமன் ஏழுமலை (58) என்பவருடன் தங்கி கூலி வேலைக்கு சென்று அந்த பகுதியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜிக்கு , ஏழுமலை திருமணம் செய்து வைத்தார். அப்போது ஏழுமலைக்கு சொந்தமான இடத்தில் நடராஜிக்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டு ஒரு வீடும் கட்டி கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டை ஏழு மலை காலி செய்யுமாறு கூறினார். அதற்கு நடராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சிறு வயதில் இருந்தே நான் வேலை செய்து உன்னிடம் தானே கொடுத்தேன் என்று நடராஜ் கூறினார்.
இதற்கிடையே ஏழு மலை நேற்றிரவு அந்த வீட்டின்மேற்கூரையை உடைத்ததுடன் வீட்டையும் சூரையடினார். இது குறித்து நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனியாக வசித்து வந்த தமிழரசன், மதுபோதையில் தான் குடியிருந்த வீட்டுக்கு தானே தீ வைத்தார்.
- வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
பனமரத்துப்பட்டி:
சேலம் மாட்டம் மல்லூர் பேரூராட்டசி கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). இவருடைய மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தமிழரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் நந்தினி, கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தமிழரசன், மதுபோதையில் தான் குடியிருந்த வீட்டுக்கு தானே தீ வைத்தார்.
இதில் வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார்.
- மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே அக்கரைபாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 23) தனது கணவரை பிரிந்து தன்னுடைய 3 வயது ஆண் குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இப்பெண்ணுக்கும், பாலம்பட்டி பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கோபால் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி அவர்களுக்கு இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. இதையடுத்து கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார். சம்பவத்தன்று இரவு கோபால் தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அங்கு சென்ற காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபாலிடம் வற்புறுத்தி உள்ளார். கோபால் மறுக்கவே அவருடன் காதலி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் கோபால் தன்னுடைய நிலையில் பிடிவாதமாக இருந்தார். இதில் மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார், அவரை அழைத்துச்சென்று சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கள்ளக்காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 295 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 1,891 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 101.82 அடியாக உள்ளது.
அதுபோல் கபினி அணைக்கு 1,630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 73.77 அடியாக உள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் இன்று நீர் திறப்பு சற்று குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த 2 அணைகளில் இருந்தும் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,024 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 2,031 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 52.78 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.98 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
- பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை அண்ணா நகரில் சுமார் 100 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். மேலும் ஆத்தூர் நகராட்சியில் நாங்கள் வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்தி வருகின்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அவர் திடீரென வாந்தி எடுத்ததால் லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- தேவ் ஆனந்துக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சேலம்
கரூர் மாவட்டம் தோட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் தேவ் ஆனந்த் (29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை அடுத்து தங்கினார்.
அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்ததால் லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் தேவ் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவ் ஆனந்துக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திரும ணம் நடந்துள்ளது. தற்போது 10 மாத குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்றும் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தேவ் ஆனந்த் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
- 4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக ௫ தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5.93 லட்சம் கடனாக பெற்றேன்.
- வாங்கிய கடனுக்கு இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன்
சேலம்
சேலம் 4 ரோடு அருகே உள்ள கல்லாங்குத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 45). இவர் கணவர் அறிவுமணி மற்றும் மகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கமலா மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணை கேனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கமலா நிருபர்களிடம் கூறிய தாவது:-
4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5.93 லட்சம் கடனாக பெற்றேன். வாங்கிய கடனுக்கு இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன்.மேலும் ரூ. 7.20 லட்சம் இன்னும் கட்ட வேண்டும் என கூறுகிறார்கள். மேலும் கடனை கட்டு மாறு அடியாட்களை வைத்து கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். இதனால் என் வீடு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து விசாரித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






