சாலையோரம் கிடந்த ஆண் பிணம்

பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையோரம் கிடந்த ஆண் பிணம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாரமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com