என் மலர்tooltip icon

    சேலம்

    • காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடன டியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
    • இன்று( 13-ந் தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் அறிவித்திருந்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடன டியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று( 13-ந் தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் அறிவித்திருந்தனர்.

    வேலை நிறுத்தம்

    அதன்படி தமிழகம் முழு வதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை

    புறக்கணித்து இன்று போராட்டத்தை தொடங்கி னர். இந்த போராட்டத்தில் சேலம் புறநகர் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய அலுல வலகங்களில் பணிபுரியும் 650 பேர் கலெக்டர் அலு வலகத்தில் பணிபுரியும் 150 ஊழியர்கள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை அரசு உட னடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கோரிக்கைகள்

    மேலும் இந்த போராட்டத்தில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்பட அனைத்து உரிமை களையும் ஊராட்சி செயலா ளருக்கு வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன் முறைபடுத்த வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யங்களை பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கிறார்கள்.

    இன்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக நாளை( 14-ந் தேதி) வட்டார தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டமும், 19-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும், 22-ந் தேதி சென்னையில் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த போவ தாகவும் கூறி இருந்தனர்.

    ஆலோசனை

    இதற்கிடையே இன்று காலை ஊரக வளர்ச்சி துறை யினர் அந்தந்த மாவட்டத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில் இந்த போராட்டத்தை தொடர்வதா அல்லது ஒத்தி வைத்து சில நாட்கள் கழிதது மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி துறை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்

    இேத கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழி யர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.

    இந்த சோதனையின் மூலம் டிக்கெட் இன்றி பயணித்த 12 ஆயிரத்து 890 பேருக்கு 98.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்தனர். அதே போல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன்பதிவு பெடடியிலும், 2-ம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்து கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் என முறைகேடாக பயணித்த 8 ஆயிரத்து 454 பேரிடம் இருந்து 40.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படடுள்ளது.

    இது போல ரெயில்களில் விதி முறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்றதாக 27 பயணிகளுக்கு மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓ ட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம், முறைகேடாக பயணம், அதிக லக்கேஜ் ஆகிய வற்றிற்காக 21 ஆயிரத்து 271 பேரிடம் இருந்து 1 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 461 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரெயிலில் பயணிகள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    • மாண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
    • தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    கர்நாடகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவில்லை.

    இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தம் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு 30-ந்தேதி முதல் கடந்த 7-ந்தேதி வரை 9 நாட்கள் சராசரியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்றன.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் 8-ந்தேதி தண்ணீர் திறப்பை கர்நாடக அரசு நிறுத்தியது. குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடுகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர், கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் என மொத்தம் 2,778 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து இன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,684 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 97.74 அடியாகவும், நீர்வரத்து 2741 கன அடியாகவும் உள்ளது. கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 76.08 அடியாகவும், நீர்வரத்து 4,605 கன அடியாகவும் உள்ளது.

    இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் முழுவதும் தமிழக எல்லைக்கு வந்து சேருவது கடினம்.

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 670 கன அடியாக இருந்த நிலையில் இன்று வெகுவாக சரிந்து வினாடிக்கு 392 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 45.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.01 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 44.06 அடியானது. நீர்மட்டம் தினமும் 1 அடி வீதம் குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பை சுட்டிக்காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில், காவிரியில் மேலும் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கண்டித்து மாண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாய சங்கத்தினர் நேற்று மாலை பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை நடுவே டயர்களை கொளுத்திப்போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • நம்பிய வயதான தம்பதி மற்றும் அவர்களது மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்ப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (70). இவரது மனைவி செல்லம்மாள்.

    சம்பவத்தன்று இவர்களது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. வீட்டில் பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய வயதான தம்பதி மற்றும் அவர்களது மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது அந்த மர்மநபர் உங்கள் வீட்டில் உள்ள நகை, பணத்தை எல்லாம் கொண்டு வந்து பூஜையில் வைக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ரூ.2 ஆயிரம் பணத்தை பூஜையில் வைத்துள்ளனர். அப்போது மந்திரம் சொல்லியபடி 3 பேர் தலையிலும் குச்சி ஒன்றை வைத்துள்ளார். இதில் பூஜையில் அமர்ந்திருந்த 3 பேருக்கும் சிறிதுநேரம் சுய நினைவு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த நபர் வீட்டில் இருந்த நகை, பணத்துடன் வேகமாக தப்பி சென்றுள்ளான். பின்னர் சுயநினைவுக்கு திரும்பிய 3 பேரும் அந்த மர்மநபர் அங்கு இல்லாததால், நகை, பணம் கொள்ளையடிப்பட்டு இருந்ததை பார்த்தும் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினர்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி அய்யம்மாள் (62) என்பவரிடமும் நேரம் சரியில்லை என்று கூறி வீட்டில் பூஜை செய்து ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தோரமங்களம் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவத்தை வைத்து அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.
    • சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.

    சேலம்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறியும், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டம்

    அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.

    பின்னர் கோட்டை ஸ்டேட் வங்கி முன்புள்ள மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வர முயன்றனர். அப்போது போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் கோட்டை ஸ்டேட் பேங்க் நுழைவு வாயில் முன்பு உள்ள சன்னதி தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மீண்டும் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட கோட்டை ஸ்டேட் பேங்க் முன்புள்ள மெயின் ரோட்டிற்கு வர முயன்றனர். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    150 பேர் கைது

    இதனை அடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் கூறும்போது, மத்தியில் ஆளும் மோடி அரசு 9 ஆண்டு காலமாக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. குறிப்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராத மோடி தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

    மத்திய அரசின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.
    • சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.

    சேலம்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறியும், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டம்

    அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.

    பின்னர் கோட்டை ஸ்டேட் வங்கி முன்புள்ள மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வர முயன்றனர். அப்போது போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் கோட்டை ஸ்டேட் பேங்க் நுழைவு வாயில் முன்பு உள்ள சன்னதி தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மீண்டும் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட கோட்டை ஸ்டேட் பேங்க் முன்புள்ள மெயின் ரோட்டிற்கு வர முயன்றனர். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    150 பேர் கைது

    இதனை அடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் கூறும்போது, மத்தியில் ஆளும் மோடி அரசு 9 ஆண்டு காலமாக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. குறிப்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராத மோடி தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

    மத்திய அரசின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து இன்று முதல் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • கொரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (43). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (43). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்குசென்று விட்டார். இதில் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி சென்றவர் மாலை அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் காண வில்லை. இதுகுறித்து வீராணம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி வயது (37). இவரது மனைவி மணிமேகலை (34), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு இருந்தார். அவரது மகன்கள் கூரை வழியாக சென்று வீட்டிற்குள் இறங்கி பார்த்த போது சுப்ரமணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பின்னர் காரிப்ப்படி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜாமுத்தையா (55). இவர் தனது மனைவி கீதா (42) என்பவருடன் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
    • ஒரு மாதம் கழித்து ராஜாமுத்தையாவை அழைத்த அவர் மீண்டும் வட்டி பணம் ரூ.24 ஆயிரத்து 500 கேட்டதாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜாமுத்தையா (55). இவர் தனது மனைவி கீதா (42) என்பவருடன் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வியாபாரத்திற்காக கடந்த ஜூலை 30-ந் தேதி தாரமங்கலத்தில் பைனான்ஸ் நடத்தி வரும் ஒருவரிடம் ரூ. 1 லட்சம் கடனாக கேட்டதாகவும், அதற்கு அவர் 15 நாட்களுக்கு ரூ.13 ஆயிரத்து 500 வட்டியை எடுத்துக்கொண்டு மீதி ரூ. 86 ஆயிரத்து 500-ஐ கொடுத்ததாகவும் தெரிகிறது. அதன்பிறகு ஒரு மாதம் கழித்து ராஜாமுத்தையாவை அழைத்த அவர் மீண்டும் வட்டி பணம் ரூ.24 ஆயிரத்து 500 கேட்டதாக தெரிகிறது. அப்போது ராஜாமுத்தையா கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு 7 மணியளவில் பைனான்ஸ் அதிபர் உட்பட 10 பேர் ஜவுளி கடைக்கு சென்று அங்கிருந்த துணிகளை அள்ளிக்கொண்டு கடையை இழுத்து மூடி பூட்டு போட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா முத்தையா மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் அதிக வட்டி கேட்டு துன்புறுத்தி வரும் பைனாஸ் அதிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பைனான் அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
    • ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், பொது மக்கள் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வா கிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.

    மேட்டூர்:

    ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் பெருமாள் கோவில் உள்ளது.

    உண்டியல் உடைப்பு

    சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த குணசேகரன் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமை யிலான போலீசார் கோவி லில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

    ரகசிய தகவல்

    இந்த நிலையில் உண்டி யல் பணத்தை திருடிய சுரேஷ் என்கிற ஆறுசாமி (36) என்பவர் வனவாசி பஸ் நிலையத்தில் இருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் வனவாசி பஸ் நிலையம் விரைந்து சென்றனர்.

    கைது

    அங்கு சேலம் செல்லும் தனியார் பஸ்சில் இருந்த சூரப்பள்ளி கிராமம் நறியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் என்கிற ஆறுசாமியை கைது செய்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவில் உண்டியலை உடைத்து ரூ.1500 திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் இந்த வாலிபர் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×