என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் Farmers complain to collector office"

    விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    சேலம்

    தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-சேலம் மாவட்டம் வீர பாண்டி யூனியன் பகுதிக்கு உட்பட்ட பெரியபுத்தூர் அணையிலிருந்து ராஜ வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி பெரியபுத்தூர் வயக்காடு பகுதியில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதியில் அமைக்கப்படும் மின்னழுத்த டவர் ராஜவாய்க்கால் கரையின் ஓரமாக அமைப்பதாக அதிகாரிகள் உறுதிமொழி கூறி இருந்தனர். தற்போது அதற்கு மாறாக அதிகாரிகள் வாய்க்காலின் நடுவே பில்லர் அமைத்து உயர்மின் அழுத்த டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வாய்க்காலின் நடுவில் பில்லர் அமைத்தால் கழிவுகளால் அடைப்புகள் ஏற்பட்டு விவசாய பாசனப்பகுதியில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறும். பாசன பகுதி முழுவதுமே விவசாயம் செய்ய வழி இல்லாத நிலை ஏற்ப டும் என்பதால் இந்த கோரிக்கை களை பரிசீலனை செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    ×