என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற போது எடுத்த படம்.
மைய அளவிலான தடகள போட்டிகள் பாத்திமா அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகள் அதிக பதக்கம் வென்று சாதனை
- முதல் போட்டியாக 3000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி
- ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம்
ஓமலூர்
சேலம் மாவட்டம் ஓமலூர் மைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் ஓமலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி பூர்ணா ரோஸ்லின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனியப்பன், இணை செயலாளர் லியா கத்அலி, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்கு மார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
ஓமலூர், காடை யாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 46 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் கலந்து கொண்டு விளை யாடி வருகின்றனர்.
இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடை பெற்றது. முதல் போட்டியாக 3000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் 35 பள்ளிகளை சேர்ந்த மாணவி ஓடினர்.
இதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஓமலூர் வேலா சாமி செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நி லைப்பள்ளி 2-ம் இடமும், பாத்திமா மகளிர் மேல்நி லைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
100 மீட்டரில் பாத்திமா பள்ளி ஹரிணி, தாராபுரம் அரசு பள்ளி கணிஷா 2-ம் இடம், பாத்திமா ரூபினா 3-ம் இடம் பிடித்தனர். மகளிர் தடகள விளையாட்டு போட்டிகளில் ஓமலூர் பாத்திமா அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் அதிக பதக்கங்களை வென்றனர். அதேபோல ஆண் அரசு பள்ளிகள் பிரிவில் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நி லைப்பள்ளி ஒட்டுமொத்த முதலிடத்தை பிடித்தது.






