என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict: டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் திறந்து வைத்தார் DIG Shanmugasundaram inaugurated it"
- பெண்கள் சிறையில் 350-க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்
- சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறை பணியாளர்களுக்காக உடற்பயிற்சி மையம்
சேலம்
சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் 350-க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய சிறை அருகிலேயே குடியிருப்பு வளாகம் உள்ளது.
இங்கு சிறை பணியாளர்களுக்காக புதிதாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சிறைத்துறை கோவை சரக டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து சிறைப் பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டதை பார்வையிட்டார்.
தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் கூறியதாவது, சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறை பணியாளர்களுக்காக உடற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தை சிறையில் பணியாற்றும் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறை பணி நேரம் முடிந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்ள வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறை பணியாளர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்யலாம்.
சிறைப் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பணியின் போது எந்தவித அழுத்தமும் இல்லாமல் பணியாற்றவும் இந்த உடற்பயிற்சி மையம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






