என் மலர்
சேலம்
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
- எடப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
பரவலாக மழை: குறிப்பாக சங்ககிரி தலைவாசல், எடப்பாடி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளில் இடி, மின்ன லுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைக ளில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது.எடப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது . நேற்றிரவும் எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது எடப்பாடியில் பெய்த தொடர் மழையால் பழைய எடப்பாடி பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரி நிரம்பி வழி கிறது. இதனால் எடப்பாடி, ேதவகவுண்டனூர் பகுதியில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல மாவட்டத் தில் பெய்து வரும் தொடர் மழையால் 100-க்கும் மேற் பட்ட ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாய நிலங்கள் எங்கு பார்த்தாலும் பச்சை பசே லென காட்சி அளிக்கிறது.32.6 மி.மீ. பதிவு :மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்கிரியில் 15.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 8, எடப்பாடி 6, தம்மம்பட்டி 3 , சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 32.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
- கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார்.
- குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவரும், தீவட்டிபட்டியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், கவுசல்யாவை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவுசல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். அதில் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
இதையடுத்து குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
- கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
- இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியாக இருந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதோடு கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6ஆயிரத்து 943 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் தற்போது 11.03 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் மீன்வளம் மற்றும் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் நிறுத்தி வைக்கப்படும். எனவே மீதி உள்ள 5.03 டி.எம்.சி. தண்ணீரே பாசனத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
- கருப்பூர் பகுதியில் மகளிர் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.
- 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.
கருப்பூர்
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் மகளிர் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 180 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் 180 தொழிற் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி பூங்கா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன.
இப்போராட்டத்தில் சங்க தலைவர் மகேஷ்வரி விஸ்வநாதன், பொருளா ளர் சாந்தி, ஒருங்கிணைப்பா ளர் சிந்து வசந்த், துைண தலைவர் பார்வதி உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இன்று ஒரு நாள் மட்டும் இந்த தொழிற்பேட்டையில் ரூ.4 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.
நாமக்கல்
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சா லைகள் இன்று உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டன.
அதுபோல் லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.
ஆயில் மில்கள்
வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழிற்கூட்ட மைப்புகள் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களான அரிசி ஆலைகள், ஆயில் தயாரிப்பு மில்கள், பருப்பு மில்கள், பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் இந்த நிறுவனங்களில் தினசரி உற்பத்தி முடங்கி உள்ளது. இதி ல் வேலை பார்த்தோரும் இன்று ஒரு நாள் வேலை இழந்துள்ள னர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், 100-க்கும் மேற்பட்ட ஆயில் மில்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் அரிசி ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலைகள் சங்க தலைவர் சியாமளநாதன் கூறியதாவது-
மின் கட்டண உயர்வால் அனைத்து சிறுதொழில்க ளும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. தொழில் நிறு வனங்களுக்கான மும்முனை மின்சார கட்ட ணம் 30 சதவீதம் உயர்ந் துள்ளது. இதனால் 4 லட்சம் ரூபாய் மின் கட்ட ணம் வந்த அரிசி ஆலை களுக்கு தற்போது 5 லட்சத்து 20 ஆயிரம் மின் கட்டணம் வருகிறது.
இதனால் செலவு மேலும் அதிகரித்துள்ளதால் தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மின் கட்ட உயர்வை திரும்ப பெற வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
- விக்னேஷ் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- தியேட்டர் அருகே சென்றபோது கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை இடது புறமாக முந்தி செல்ல முயன்றார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் விக்னேஷ் (31). எம்.பிஏ பட்டதாரியான இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தியேட்டர் அருகே சென்றபோது கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை இடது புறமாக முந்தி செல்ல முயன்றார்.அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர் பஸ்சிற்குள் விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் தலையின் மேல் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் றந்தார். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் விக்னேஷின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை டிரைவர் இளையராஜா (47) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள விக்னேஷின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் சோகமான சூழல் நிலவியது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் விக்னேஷின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.
சேலம்:
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக சேலம் மாநகர் விளங்குகிறது. சேலத்தில் அடையாளமாக வெள்ளி கொலுசு, சேலம் உருக்காலை, சேலம் மாம்பழம், ஜவுளி உற்பத்தி, ஏற்காடு, மேட்டூர் அணை ஆகியவை விளங்கி வருகிறது.
சேலம் மாநகரில் 10 லட்சம் பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். மேலும் கொங்கு மண்டலத்தில் கோவைக்கு அடுத்தபடி யாக சேலம் பெருநகரமாக விளங்குவதால் அண்டை மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் முக்கிய தேவைகளுக்கு சேலத்திற்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் சேலம் மாநகரின் முக்கிய சாலைகள் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும்.
சேலம் மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், திருப்பதி, மைசூர், பெங்களூர் என அண்டை மாநிலங்களுக்கும் என 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
இதே போல வெளியூர்களில் இருந்தும் 24 மணி நேரமும் சேலம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் சேலம் புதிய பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடிய, விடிய பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இப்படி பல்வேறு வகையிலும் சிறப்பு வாய்ந்த சேலம் புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையத்தில் எந்த பகுதியில் பார்த்தாலும் புது, புது கடைகள் தொடங்கப்பட்டு பயணிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் 150 கடைகளுக்கு தான் அனுமதி உண்டு. ஆனால் தற்போது 230-க்கும் அதிகமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக நாமக்கல், திருச்சி, நாகர்கோவில், ஏற்காடு பஸ்கள் நிற்கும் பிளாட்பார்ம் பகுதியில் அதிக அளவில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த பிளாட்பார்மில் பயணிகள் கால் வைக்க முடியாத அளவுக்கு தரை பழக்கடைகளும் நிரம்பியுள்ளன. இதனால் பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாமல் தினம், தினம் தவித்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் பயணிகள் அமர இருக்கை வசதிகளும் அந்த பிளாட்பார்மில் போடப்பட்டிருந்தன. தற்போது அந்த இருக்கை வசதிகள் அனைத்தும் மாயமாகிவிட்டன. நிற்பதற்குகூட இடமில்லாமல் கடைகள் விரிக்கப்பட்டு உள்ளதால் மழை வந்தால் ஒதுங்குவது கூட பயணிகளுக்கு சிரமமாகி உள்ளது.
பஸ் நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பஸ் நிலையத்தில் கடும் அவதிப்படும் நிலை நிலவுகிறது.
எனவே பயணிகள் சிரமத்தை போக்க அதிகாரிகள் இதில் உடனடியாக தலையிட்டு கடைகளை முறைப்படுத்தி பயணிகள் வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பெரும்பாலான பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பயணி சசிக்குமார் கூறியதாவது-
சேலம் புதிய பஸ்நிலையத்தில் நடைபாதையை அடைத்து ஏராளமான கடைகள் வைக்கப்பட் டுள்ளன. இதனால் பயணிகள் நடைபாதையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக நிரந்தர கடைகள் இடைவெளி இல்லாமல் அதிக அளவில் தொடர்ந்து உள்ளது. ஒரு கரையில் இருந்து மற்ற பகுதிக்கு பஸ் ஏற செல்ல முடிவதில்லை. இது தவிர தரை கடை களும் நடை பாதை முழுவதும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றார்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த மதன் குமார் கூறியதவாது, சேலம் புதிய பஸ் நிலை யத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. கழிவறைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுத்தமாக பராமரிப்பது இல்லை, நடைபாதையில் முழுவதும் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைபாதையில் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பயணிகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- சேலம் மாநகரில் 10 லட்சம் பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.
- வெளியூர்களில் இருந்தும் 24 மணி நேரமும் சேலம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்கின்றன.

- ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பா (80). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.
- நேற்று முன்தினம் மூதாட்டியிடம் சென்று தகராறு செய்து தாக்கியதில் மூதாட்டி பாப்பா காயமடைந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள கசுவரெட்டிப்பட்டி ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாப்பா (80). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது உறவினர் கோபால் (60) என்பவர் பாப்பாவிற்கு சொந்தமான நிலத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூதாட்டியிடம் சென்று தகராறு செய்து தாக்கியதில் மூதாட்டி பாப்பா காயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- தாரமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
சேலம்:
தாரமங்கலம் அருகே உள்ள பாரக்கல்லூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாரமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு (40), குப்புசாமி (41) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்தனர்.
- 5 பேரும் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில்சென்றனர். அதன் பிறகு இது வரை வீடு திரும்பவில்லை.
- அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
சேலம்:
சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் மெயின்ரோடு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சூர்யாபேகம் (62). இவரது மகன் சிராஜ்ஜின் முனீர் (39), வெள்ளி தொழிலாளி. இவரது மனைவி பரக்கத்நிஷா (29). இவர்களது குழந்தைகள் ஷேக்சதாக் (10), ஜாயதா (5).
திடீர் மாயம்
இவர்கள் 5 பேரும் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில்சென்றனர். அதன் பிறகு இது வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
ஆனால் அவர்கள்கு றித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து சிராஜ்ஜின் முனீரின் சகோதரி சல்மா சூர மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்கள். மேலும் மாயமாகி 8 நாட்கள் ஆகி உள்ளதால் அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.
கடன் தொல்லை
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது வெள்ளி வேலை செய்து வந்த சிராஜ்ஜின்முனீருக்கு கடன் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
இதனால் அவரை யாராவது மிரட்டினார்களா? இதனால் அவர் குடும்பத்துடன் அவர் எங்காவது சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குறிப்பிட்ட சமுதாயத்தி னருக்கு சொந்தமான மயானம் உப்பாரப்பட்டி பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் 7 சென்ட் பரப்பளவில் உள்ளது.
- இந்த நிலையில் மயானத்திற்கு செல்லும் வழி பாதையானது தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் என்று கூறி ஒரு சிலர் அந்த வழியை மறைத்து கம்பி வேலி அமைத்துக் கொண்ட தாக கூறப்படுகிறது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தார மங்கலம் அருகே உள்ள மானத்தால் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பாரப்பட்டி பகுதியில் சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமான மயானம் உப்பாரப்பட்டி பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் 7 சென்ட் பரப்பளவில் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இப்ப குதியினர் பயன்படுத்தி வந்தனர்.
கம்பி வேலி
இந்த நிலையில் மயானத்திற்கு செல்லும் வழி பாதையானது தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் என்று கூறி ஒரு சிலர் அந்த வழியை மறைத்து கம்பி வேலி அமைத்துக் கொண்ட தாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டாக ஒவ்வொரு முறை இறந்த வரின் உடலை எடுத்து செல்லும்போதும் இந்த வழித்தட பிரச்சினை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்க ளுக்கு உரிய வழித்தடம் வேண்டும் என்று கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தனர். இது தொடர்பாக கடந்த 6 மாதங் களுக்கு முன்பு வரு வாய்த் துறையினரால் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று உள்ளது. இருப்பினும் இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
உடலை வைத்து போராட்டம்
இந்த சூழ்நிலையில் நேற்று உப்பாரப்பட்டி பகுதியில் பழனி (65) என்ற கூலித் தொழிலாளி உடல்நலக்குறை வால் இறந்தார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் மயானத்திற்கு செல்லும் வழியில் சென்ற போது வேலி அமைத்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக கூறப்படுகிறது. இதை யடுத்து பழனியின் உறவி னர்கள் உடலை நடுவழியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், மானத்தால் கிராம நிர்வாக அலுவலர் திரவிய கண்ணன் மற்றும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
10 நாட்களில் வழித்தடம்
வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் மயானத்திற்கு செல்லும் வழித்தட பாதையை இன்னும் 10 நாட்களில் நிரந்தரமாக ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் 2 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை கைவிட்டு மீண்டும் உடலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மயானத்தில் அடக்கம் செய்தனர். மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நடை பெறுவதற்கு முன்பாக அதி காரிகள் உடனடியாக மயானத்திற்குச் செல் லும் மாற்று வழிபாதையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
- சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவும் ஏற்காட்டில் கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல முக்கிய சாலைகள் சேறும் சகதியுதாக காட்சியளிக்கிறது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பகல் நேரங்களிலும் குளிர் தாங்கும் ஆடைகளான சுவட்டர், ஜர்கின் உள்ளிட்டவற்றை அணிந்தே வெளியே வருகின்றனர்.
மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் மலைப் பாதையில் ஆங்காங்கே உள்ள நீர் வீழ்ச்சிகள், கிளியூர் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
பொதுவாக வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் முகாமிட்டு பொழுதை கழித்து செல்வர். ஆனால் நேற்று மழை பொழிவு காரணமாக குறைந்தளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்காட்டில் பெய்துவரும் மழை மற்றும் குடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.