என் மலர்tooltip icon

    சேலம்

    • நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42). திருமணமாக தவரான இவர் கோவில் பூசாரி இருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சங்ககிரியை அடுத்து வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது. இதில், குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் உடலை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ் டிரைவரான சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த சுதாகர் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க.
    • அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:

    பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் வாழ்க்கை மாற்றத்திற்கு துருப்பு சீட்டாக உள்ளது.

    கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களிலும் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என ஆராய்ந்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரி திட்டம். பெண்களின் கனவு திட்டம், கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சரால் பெண்கள் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    பெண்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் தி.மு.க., பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க., இந்த சட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க. தான். தற்போது பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து, மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் பெண்களுக்கு மகுடம் சூட்டிய திட்டம். இந்தத் திட்டத்தால் சகோதரனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும். பொதுமக்கள் அரசியல் குறித்து பேச வேண்டும். உள்ளாட்சியில் 50 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த சாதனையை செய்தது தி.மு.க. தான், மகளிர் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நேற்று இரவு சேலம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 231 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையாததாலும், அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதாலும், கடந்த 23-ந் தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 231 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 37.91 அடியாக இருந்த நிலையில் இன்று 38.02 அடியாக உயர்ந்து உள்ளது.

    தெற்கு கோட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    சேலம்

    சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்தில் நாளை (27-ந் தேதி) புதன்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் அன்னதானபட்டி அலுவலகத்தில் காலை 11 மனிக்கு நடைபெறுகிறது. எனவே தெற்கு கோட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு சேலம் தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் அன்பரசன் தெரித்துள்ளார்.

    • பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள்
    • சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்க்கவும்

    சேலம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.சிறப்பு பஸ்கள் :இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடிநபி, காந்தி ெஜயந்தி, தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (27-ந்தேதி) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்க ளூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    பவுர்ணமி: இதேபோல வருகிற 29-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக நாளை மறுநாள் (28-ந்தேதி) மற்றும் 29-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சேலம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வெங்கடேசன் புற்றுநோய்க்கு பயன்படுத்தும் செங்காந்தள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.
    • இன்று அதிகாலை 4.30 மணியளவில் வியாபாரம் சம்பந்தமாக திருப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு வந்தார்.

    சேலம்

    திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடாசலம் கவுண்டர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் வெங்கடேசன் (37). இவர் புற்றுநோய்க்கு பயன்படுத்தும் செங்காந்தள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வியாபாரம் சம்பந்தமாக திருப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு வந்தார். அங்கு பைனான்சியர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை கடனாக பெற்றார்.

    பின்னர் அரியானூர் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் எதிரில் உள்ள காபி கடைக்கு சென்றுள்ளார். அங்கு வெங்கடேசனின் நண்பர்களான ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த வாஞ்சிநாதன், திருப்பூரை சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன் ஆகியோர் இருந்துள்ளனர்.அப்போது அவர்கள் வெங்கடேசன் வைத்துள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி தருவதாகவும், இதற்கு ரூ.5 லட்சம் கமிஷன் தருவார்கள் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் கையில் வைத்திருந்த பணத்துடன் அவர்களுடன் சென்றுள்ளார்.பணத்தை மாற்றுவதற்காக இரும்பாலை மாரமங்க லத்துப்பட்டி பகுதி 4 பேரும் வந்தனர். அப்போது அங்கு 2 காரில் வந்த சிலர் வெங்கடேசன் மற்றும் நண்பர்களிடம் தங்களை போலீஸ் என தெரிவித்தனர். மேலும் அதில் ஒருவர் போலீஸ் சீருடையில் இருந்ததாகவும் தெரிகிறது.அப்போது அவர்கள் நீங்கள் வைத்திருக்கும் பணம் கருப்பு பணம் எனக்கூறி வெங்கடேசன் உள்பட 4 பேரையும் விசாரணைக்கு வருமாறு அழைத்து சென்றனர். இரும்பாலை கோவிட் சென்டர் அருகே கார் வந்தபோது பணத்தை பறித்துக் கொண்ட அந்த கும்பல் வெங்கடேசனை மட்டும் அங்கேயே இறக்கிவிட்டு சென்றனர்.இதனால் அதிர்ச்சி யடைந்த வெங்கடேசன் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதி சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அரியானூர் பகுதி என்பதால் இதுகுறித்து துைண கமிஷனர் மதிவாணன், வெங்கடேசனிடம் பழைய ெசல்லாத 500 ரூபாய் நோட்டுகள் யாரிடம் இருந்து பெறப்பட்டது, எதற்காக அதை நீங்கள் வாங்கி சென்றீர்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் வெங்கடேசன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருகிறார். எனவே 50 லட்சமும் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளா அல்லது புதிய நோட்டுகளை கடனாக பெற்றுக் ெகாண்டு திசை திருப்ப பழைய ரூபாய் நோட்டுகள் என்று நாடகமாடுகிறார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ.653 சம்பளம்
    • ஆனால் தனியார் நிறுவனம் வெறும் ரூ.350 மட்டுமே வழங்கி வருகிறது

    சேலம்

    தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து ரூ.653 சம்பளம் வழங்கிட அறிவித்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இந்த தொகை முறையாக வழங்கி வரும் நிலையில் சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்க வேண்டிய 653 ரூபாயை வழங்காமல் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் வெறும் ரூ.350 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த ஏராளமான ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதனையடுத்து இன்று நடந்த மாமன்ற கூட்டத்தில் ஒரு சில கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக மேயர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த நிலையில் கவுன்சிலர் இமயவர்மன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேயரை சந்தித்து தனியார் ஒப்பந்ததாரர் வழங்கும் குறைவான ஊதியத்தை குறித்து புகார் தெரிவித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மேயர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதனிடையே தூய்மை பணியாளருக்கான முழு ஊதிய தொகையும் வழங்காவிட்டால் அடுத்த மாதம் நடைபெறும் மாமன்ற கூட்டத்தின் போது மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    • குறிப்பாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • ஈரடுக்கு பேருந்து நிலையம் பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை

    சேலம்

    சேலம் மாநகராட்சி மன்றத்தின் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது . துணை மேயர் சாரதாதேவி, இணை ஆணையாளர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    நாய் தொல்லை:குறிப்பாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆங்காங்கே தெருநாய்கள் பசியாலும் பட்டினியாலும் இறந்து கிடப்பதும், அதன் காரணமாக சாலையில் செல்லும் மனிதர்களை கடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தாலும் பிராணிகள் வதை தடுப்புச் குழுவினர் மாநகராட்சி பகுதிகளில் நேரடியாக பார்வையிட்டு தெருநாய்களை பிடித்து தனியாக ஒரு இல்லம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் போதிய மின்விளக்கு இல்லாததால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிஉள்ளனர். எனவே மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம் மாநகராட்சியில் தற்போது 100 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் முதல் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே வரி விதிப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பழைய கட்டிடங்களுக்கான வரியையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் சேலம் மாநகராட்சியில் கடந்த காலங்களில் வாங்கிய பேட்டரி வாகனங்கள் செயலிழந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனை முறையாக பராமரிக்க வேண்டும் அல்லது எடைக்காவது போட வேண்டும் வீணாக குப்பையில் மக்குவதாக தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன்,பேட்டரி வாகனத்தை புதுப்பிப்பது குறித்தும் அது வாங்கியது குறித்து ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஒரு நபர் ஆணையத்தின் முடிவு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி தற்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவதை பெருமையாக சொல்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கப்பட்டு 1000 ரூபாய் தருவதை பெருமை கொள்வதாக தெரிவித்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் யாதவமூர்த்தி கூறியதாவது, தாலிக்கு தங்கம், மடிக்கணினி உட்பட பல்வேறு சாதனை திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன. ஆனால் அதை தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி விட்டு ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குவதை பெருமையாக கூறி வருகிறார்கள். மேலும் சேலம் மாநகரில் துப்புரவு பணிக்கு டெண்டர் விட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் மக்கள் பணம் வீணாகிறது இதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சமீப காலங்களில் எந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் பெருமளவில் வளர்ச்சி
    • இன்றைய காலகட்டத்தில் அதிக தொழிற்சாலைகளில் அபாயகரமான பணிகள் வளர்ந்து வரும் சூழ்நிலை

    சேலம்:

    தமிழ்நாடு அரசு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஓசூர் தேசிய மனிதவள வளர்ச்சி குழுமம் இணைந்து தொழிற்சாலையின் மருத்துவ அலுவலர்களுக்கான தொழில்வழி சுகாதாரம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு ஓசூர் அசோக் லேலாண்ட் எம்.டி.சி. கூட்டம் அரங்கில் நடைபெற்றது.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், தொழிலாளர்களின் நலனை காப்பது தலையாய கடமை. சமீப காலங்களில் எந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் பெருமளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் விபத்துக்களும் குறைந்துள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் அதிக தொழிற்சாலைகளில் அபாயகரமான பணிகள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகளில் வரையறுக்கப்பட்டு உள்ளவாறு தொழில்வழி சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர்களின் நலன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஓசூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் இக்கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ெசன்னை இந்தியன் அடிட்டிவ் லிட் சீனியர் மேனேஜர் மற்றும் அசோக் லேலாண்ட் முதன்மை மனிதவள அலுவலர் ஆகியோரும் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.தொழில் வழி மற்றும் பணி சூழல் பாதுகாப்பில் மருத்துவர்களின் செயல்பாடு குறித்து தொழிற்சாலை மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தேசிய மனிதவள வளர்ச்சி குழுமம் பழனிகுமார் நன்றி கூறினார்.

    • இன்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகிறார்.
    • டிசம்பர் மாதம் 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு

    சேலம்

    தருமபுரியில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று காலை பங்கேற்கிறார்.உற்சாக வரவேற்பு: தொடர்ந்து இன்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகிறார். அவருக்கு கலெக்டர் கார்மேகம் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சியினர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இன்று இரவு சேலத்தில் ஓய்வெடுக்கிறார்.

    சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் நாளை (27-ந் தேதி ) காலை 9 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.மாநாட்டு திடலில் ஆய்வு: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி அவர் செல்லும் வழியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 

    • கணவன்-மனைவிக்கிடையே தகராறு
    • தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து ஜோதியிடம் போலீசார் விசாரணை

    சேலம்

    சேலம் நெத்திமேடு மணிய னூரை சேர்ந்தவர் செந்தில்முரு கன் (46), லாரி தொழிலாளி. இவருக்கும் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரியை சேர்ந்த ஜோதி (36 )என்ப வருக்கும் கடந்த 18 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    பிரிந்து வாழ்ந்த தம்பதி :கணவன்-மனைவிக்கி டையே தகராறு ஏற்பட்ட தால் கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து ஜோதி சென்னகிரியில் தனியாக வீடு வாடகைக்கு வீடு எடுத்து மகன், மகள்களுடன் வசித்து வருகிறார். செந்தில்முரு கன் அவ்வப்போது மனைவியை பார்க்க வந்து செல்வார்.

    பிணமாக கிடந்தார் :வழக்கம் போல நேற்று முன்தினம் சென்னகிரி யில் உள்ள மனைவி வீட்டிற்கு செந்தில்முருகன் வந்தார். பின்னர் வீட்டு வரண்டாவில் கயிற்று கட்டி லில் படுத்து தூங்கினார். தொடர்ந்து நேற்று காலை செந்தில்முருகன் அந்த கட்டிலிலேயே காயங்க ளுடன் இறந்து கிடந்தார். இது குறித்து மணியனூரில் வசிக்கும் மாமியார் சி ன்ன பிள்ளைக்கு, ஜோதி தெரிவித்தார்.

    அவர் வந்து பார்த்த போது செந்தில்முருகன் தலை, முகம், கை, கால்களில் காயங்கள் இருப்பதை கண்டு போலீசாருக்கு தக வல் கொடுத்தார். ஆட்டை யாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் போலீ சார் சம்பவம் குறித்து விசா ரணை நடத்தினர்.

    பின்னர் செந்தில்முருகன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரூரல் டி.எஸ்.பி. அமல அட்வின் தலைமையிலான தனிப்படை போலீசார் தடய அறிவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் லில்லியை அழைத்து வந்து கொலை குறித்த தடயங்களை சேகரித்தனர்.பரபரப்பான தகவல்கள் :தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து ஜோதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிக்கும், அந்த பகுதியை சேர்ந்த மனைவியை பிரிந்து வாழும் சுரேஷ் (35)என்ப வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சுரேசையும் மடக்கி பிடித்த னர். பின்னர் சுேரஷ் மற்றும் ஜோதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது வெளியான பரபரப்பு தகவல்கள் வரு மாறு, ஜோதியின் கள்ளக்கா தலனான சுரேஷ், ஜோதியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். மனைவியை பிரிந்து வாழ்ந்த செந்தில் முருகனும், ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார். அதன்படிநேற்று முன்தினம் இரவு செந்தில்முருகன் குடிபோ தையில் சென்ன கிரியில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது செந்தில்முருக னுக்கும், ஜோதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஜோதி அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே நள்ளிரவில் சுரேஷ் அங்கு வந்தார்.அப்போது செந்தில்முரு கன் நீ ஏன் இங்கு வருகிறாய், உன்னால் தானே எனது குடும்பத்தில் இப்படி பிரச்சினை ஏற்படுகிறது. மனைவி கோபித்து கொண்டு செல்கிறாள் என்று கூறி உள்ளார்.

    அடித்து கொலை :இதில் அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டுள் ளது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அருகில் கிடந்த ரீபர் கட்டையை எடுத்து செந்தில் முருகனை சரமாரி யாக தாக்கினார். இதில் காயம் அடைந்த செந்தில்முருகன் துடி துடித்து இறந்ததும் தெரிய வந்துள்ளது.சுரேஷ் மற்றும் ஜோதியிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • மூக்கனூர் வனப்பகுதியில் இரும்பு கூண்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை அடைத்து வைத்து கண்காணித்து வருகின்றனர்.
    • கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தை நட மாட்டம் உள்ளதா?என கண்கா ணித்து வந்தனர்

    காடையாம்பட்டி

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அருகே டேனிஷ் பேட்டை வனசரகம் உள்ளது.

    சிறுத்தை நடமாட்டம்: இங்குள்ள மூக்கனூர், எலத்தூர், தேன்கல்கரடு உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் ஆடுகளை கடித்து இழுத்துச் சென்ற தாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர்கள் இந்த வனப்பகு திகளில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தை நட மாட்டம் உள்ளதா?என கண்கா ணித்து வந்தனர். ஆனால் கேமிரா வில் எதுவும் பதிவாகவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மூக்கனூர் பணக்கார கொட்டாய் பகு தியை சேர்ந்த முத்து என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் கரட்டுப்பகுதி உச்சியில் சிறுத்தை நட மாட்டம் இருப்பதாக டேனிஷ்பேட்டை வனத் துறைக்கு தகவல் தெரி வித்தார்.கிராம மக்கள் மனு: மேலும் இதுதொடர்பாக சேலம் மாவட்ட வன அலுவ லரையும் சந்தித்து மூக்கனூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் மனு கொடுத்த னர்.

    இரும்பு கூண்டு: அதைத்தொடர்ந்து நேற்று டேனிஷ்பேட்டை வனத்துறை யின் மூக்கனூர் வனப்பகுதி யில் இரும்பு கூண்டில் ஆட்டுக்குட்டி ஒன்றை அடைத்து வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா? என மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி இன்று ஆய்வு செய்கிறார்.

    ×