சங்ககிரி அருகே புளியமர தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.
சங்ககிரி அருகே புளியமர தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com