என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடு திருட முயன்றவர் கைது
- பொன்னுசாமி விவசாயி இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் பொன்னுசாமியின் வீட்டில் இருந்து ஆடுகளை திருட முயன்றனர். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் பொன்னுசாமியின் வீட்டில் இருந்து ஆடுகளை திருட முயன்றனர். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆடு திருட வந்தது வீராணம் தாதம்பட்டி அடுத்த நாகர்படையாச்சி காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.