அயோத்தியாப்பட்டணத்தில்பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்

வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
அயோத்தியாப்பட்டணத்தில் நடைபெற்ற பெண்கள் உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்.
அயோத்தியாப்பட்டணத்தில் நடைபெற்ற பெண்கள் உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூரில் அயோத்தி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி, வீரபாண்டி களஞ்சியம் கூட்டமைப்பு நிர்வாகி சிவராணி, அயோத்தி பெண்கள் கூட்டமைப்பு முதன்மை செயல் அலுவலர் மேரிஸ்டெல்லா, வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் விஷ்ணுபிரியா ஆகியோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பொருளாதார மேம்பட்டிற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com