என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும்.
    • சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மறுவாழ்வு சங்க தலைவர் செல்லதுரை கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதியில் 1964 புயலுக்கு முன் ஆயிரக்க ணக்கான மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர்.

    புயலுக்கு பின்னர் முகுந்தராயர் சந்திரம் பகுதியில் மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வந்ததாகவும், அதே பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து கடைகள் ஏற்படுத்தி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு தேவையான பொருட்கள், உணவுகளை விற்பனை செய்து வந்தனர்.

    தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் மீனவர்கள் மட்டுமே அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது சில நபர்கள் அத்துமீறி கடை அமைத்து சட்டவிரோமாக புகையிலை, மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதால் பாரம்பரியமான மீனவர்களால் அமைக்கப் பட்டுள்ள கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டுள் ளது.

    இதனால் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மனு கொடுத்தபோது நிர்வாகிகள் நம்புக்குமார், உமையேசுவரன், சக்திவேல், உமாரவி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் அதிகபட்சமாக 53 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் அபிராமம் பேரூராட்சி, பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சி கள், முதுகுளத்தூர் ஒன்றி யத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளையும் சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அபிராமத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக மான மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகு ளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் அலைச்சல் ஏற்படுகிறது.

    அரசு நலதிட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிர மங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்ப தற்காக அபிராமத்தை தலைமை யிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    மத்திய, மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்களை பெற கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று வர வேண்டி உள்ளது. இன்னும் அபி ராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் பின்தங்கிய பகுதிகளாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அபிராமத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப் பட்டால் அந்த பகுதி கிராம மக்கள் பயனடைவார்கள். அந்த பகுதி வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவர்களை அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மதுரை வளையங் குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வடக்கு நகர 20-வது வார்டு செயலாளராகவும், ராமநாதபுரம் வடக்கு நகர பொறியாளர் அணி அமைப்பாளருமான பொறி யாளர் கா.மருதுபாண்டி போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை வளையங் குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடிய ஒருவர் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாகவும், அநாகரீக மான முறையிலும் பாட்டு பாடினார். மேலும் தி.மு.க. தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசப்பட்டது.

    இதனால் தி.மு.க.வினர் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்த னர்.

    எனவே அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவர்களை அவதூறாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சந்திராயன் திட்டம் வெற்றியடைந்ததையொட்டி ராமநாதபுரத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.
    • மாணவர்கள் தொலை நோக்கி கருவி மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை யிறங்கும் காட்சியை கண்டு களித்தனர்.

    ராமநாதபுரம்

    சந்திராயன் 3 தரை யிறங்கும் காட்சிகளை தொலைநோக்கி மூலம் காணும் வசதியை ராமநாதபுரம் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நடந்த இந்த நிகழ்விற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், மல்லிகா முன்னிலை வகித்தனர்.

    தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார். அஸ்ட்ரோ கிளப் சொக்க நாதன் தொலை நோக்கி கருவி மூலம் மாண வர்களுக்கு சந்திராயன்- -3 விண்கலத்தை காட்டினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ராமநாதன், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ஏராளமான மாணவர்கள தொலை நோக்கி கருவி மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை யிறங்கும் காட்சியை கண்டு களித்தனர். இஸ்ரோவால் சந்திராயன் தரையிறங்கும் காட்சியை மாணவர்களுக்கு பெரிய திரையில் ஒளிபரப்பு செய்தனர். இதை மாண வர்கள் கண்டு மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

    சந்திராயன் வெற்றியை தொடர்ந்து ராமநாதபுரம் அரண் மனை பகுதியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இதேபோல் ஏராளமான பள்ளிகளில் மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

    • கமுதி அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • அரசு கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார்.

    முகாமில் 164 பயனாளி களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்தின் வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை மனுக்கள் மூலம் கொடுத்து பெற்றுக்கொள்ளவே நடத்தப்படுகின்றன.

    கமுதி தாலுகாவில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இது பாராட்டுக்குரியது.

    இதனை பரமக்குடியில் அரசு கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.

    விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், கமுதி யூனியன் மேனேஜர் ராமச் சந்திரன், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, கமுதி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் அய்யனார் மாவட்ட இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 500 மரக்கூழ் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக சுற்றுச்சூழல் நண்பனான காகித மரக் கூழால் 500 விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. இதில் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பின்னர் செப்டம்பர் 19ந்தேதி ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், பரமக்குடி, உச்சிப்புளி ஆகிய இடங்களிலும், வருகிற 20ந்தேதி ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி ஆகிய இடங்களிலும் விநாய கர் சிலை ஊர்வலங்கள் நடக்க உள்ளது.

    இந்தாண்டு விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் நண்பன் என்ற முறையில் மரக்காகித கூழ் கொண்டு 4 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாட்டர் கலர் மூலம் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம்' என்ற கருப் பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்துக்களின் ஒற்றுமை மற்றும் எழுச்சி விழாவாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருக்கும்.

    இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் விதமாக செய்யப்பட்டுள் ளது. இது மீன்களுக்கு உணவாகவும் பயன்படும். விநாயகர் சிலைகளில் சிம்ம வாகனம், மான் வாகனம், காளை வாகனம், மயில், அன்ன வாகனம் போன்ற வற்றில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    • தனுஷ்கோடி -அரிச்சல்முனை சாலையை முழுமையாக மணல் மூடியது.
    • வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிச னம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சுற்றுலா தலமான தனுஷ் கோடி, அப்துல் கலாம் நினை விடம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க் கின்றனர்.

    குறிப்பாக நாட்டின் தென் எல்லையாக உள்ள தனுஷ்கோடியின் கடல் அழகை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் அங்கு சென்று வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடியில் வழக் கத்தை விட கடல் கொந் தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் அலைகள் பனைமர உயரத் துக்கு எழும்பின.

    சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலைகள் முழுவதும் மணல்கள் மூடி யது. அடிக்கடி புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மணல் குவிந்ததால் வாகனங்கள் அதில் சிக்கின. இதனால் தனுஷ்கோடிக்கு செல்லும் வாகனங்கள் ரவுண்டானா வரை செல்ல முடியாமல் அரிச்சல் முனையில் நிறுத்தப்படு கிறது. அங்கு இருந்து சுற்று லாப் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தனுஷ் கோடியின் நினைவுச் சின்னங்களை பார்த்து வரு கின்றனர்.

    தனுஷ்கோடியில் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக அடிக்கடி சாலை களை மணல்கள் மூடுவது வழக்கம். நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப் பார்கள். ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு மேலாக சாலையில் குவிந் துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந் துள்ளது.

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    • முதுகுளத்தூரில் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் பை பாஸ் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நகர் முழுவதும் பேவர்பிளாக் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் முது குளத்தூர் தாசில்தார் சடை யாண்டி தலைமையில் டி. எஸ்.பி. சின்ன கன்னு, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் டி.எஸ்.பி. சின்ன கண்ணு கூறும்போது இனிமேல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடி வடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரிக்கை செய்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சிவில் சட்டம் என்ற பெயரால் மதத்தை வைத்து மக்களை பிளவு படுத்துவது, மணிப்பூர், ஹரியானா கலவரத்தை தூண்டுவது, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் தலைவர் ஹாஜி வருசை முகமது தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழ உறுப்பினர் ராஜன், செந்தில்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவர் ராமலட்சுமி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அற்புத குமார், மனித நேய மக்கள் கட்சி இப்ராஹீம் மக்கள் ஒற்றுமை மேடை வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெகுநாதபுரம் ஊராட்சியில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் முகாமை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் இந்திய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காரைக்கால் நிறுவ னம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான திறன் வளர்ப்பு திட்டம் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். ஓ.என்.ஜி.சி மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல், 2 கிராமங்களுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் ரவிக்குமார், விஜயகண்ணன், தங்கமணி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (ரெகுநாதபுரம்), முத்தமிழ் செல்வி பூர்ணவேல் (வாலாந்தரவை), மண்டபம் வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவவுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    பச்சை கிளி, மைனா, பஞ்சவர்ண புறா போன்ற உயிரினங்களை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. அதனை வளர்த்தால் உடனடியாக வன அலுவலகங்களில் ஒப் படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரி வித்து உள்ளது.

    வன உயிரினப்பா துகாப்பு சட்டம் 1972-ன் படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்ச வர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங் காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப் படி குற்றமாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கக்கூடிய வன உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்ச், பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.

    எனவே வளர்ப்பில் உள்ள கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். வனப் பணியாளர்கள் ரோந்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை வளர்த்தவர்களுக்கு ரூ.25ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், என்று ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    ×