என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
    • 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 84-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து 201 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனைக்கு பின் கோவில் திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஒரு அறக்கட்டளை சார்பில் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இலங்கையை நோக்கி ஆஞ்சநேயர் பார்ப்பது போன்று இந்த சிலை கட்டப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமாயணத்தோடு நெருங்கிய தொடர்புடைய தலம்தான் ராமேசுவரம் ராமநாதசாமி திருக்கோவில் ஆகும். காசிக்கு நிகரான புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.

    இந்தநிலையில் ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஒரு அறக்கட்டளை சார்பில் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் தொடங்கியது. தற்போது அஸ்திவார பணி முடிவடைந்து விட்டது. உப்பு காற்றால் சிலை கட்டிட பணிகள் பாதிக்கப்படாத வகையில் ரசாயனம் கலந்த சிமெண்டு கலவை மூலமும், அதற்கு ஏற்ற கற்கள் பயன்படுத்தியும் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி நடந்து வருகிறது.

    இலங்கையை நோக்கி ஆஞ்சநேயர் பார்ப்பது போன்று இந்த சிலை கட்டப்பட்டு வருகிறது. தற்போது 16 அடி உயரத்தில் அஸ்திவார பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இன்னும் 6 மாதத்திற்குள் மற்ற பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு வரும் இடத்தின் அருகில் சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 51 அடி உயரத்தில் நடராஜர் சிலை கட்டும் பணி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

    • 100 வருடங்களுக்கு மேலான பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
    • தொல்லியல் ஆய்வாளர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே புதுக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் கண்காட்சி பள்ளித் தலை மையாசிரியர் மலைப் பாண்டி தலைமையில் நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவி மகாஸ்ரீ வர வேற்றார். தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் ராமச்சந்திரன் பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜகுரு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வர லாற்றைக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், அரண்மனை கள், கோட்டைகள், கோ வில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொ ருட்கள் பரவி கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் ஆகும்.

    வெறும் இலக்கிய சான்று கள் நம் தொன்மையைச் சொல்லிடாது. அதனுடன் தொல்லியல் தடயங்களும் இருந்தால் தான் அதன் பழமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பழமையான தொல்லியல் சின்னங்களை பாது காக்காமல் விட்டு விட்டால் அவை அழிந்து, இடிந்து போகும்.

    வரலாறு தெரிந்த மாண வர்களை அதிகமாக உரு வாக்குவதற்கு தொன்மை பாதுகாப்பு மன்றம் உதவு கிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    7-ம் வகுப்பு மாணவன் வால்மீகநாதன் நன்றி கூறி னார். பின்பு நடந்த கண்காட்சியில் கல்வெட்டு களின் அச்சுப்படிகள், பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்ட னர்.

    • காலை உணவு திட்டம் விரிவாக்கத்தத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    மண்டபம்

    தமிழகத்தில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரி வித்தன. இதையடுத்து இந்த திட்டத்தை விரி வாக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி மாநிலம் முழுவதும் காலை உணவு விரிவாக்க திட்டம் இன்று தொடங்கி வைக்கப் படுகிறது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள இருமேனி ஊராட்சி, குப்பானிவலசை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப் பன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், எம்.எல்.ஏ-க்கள் கருமாணிக்கம், முருகேசன், ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதர், மண்டபம் ஒன்றிய சேர்மன் சுப்பு லட்சுமி ஜீவானந்தம், தி.மு.க மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் தேர்போகி முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் தவுபீக் அலி, ஊராட்சி மன்றத் தலை வர்கள் சிவக்குமார், காமில் உசேன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீருடைப் பணியாளர் தேர்வு 6 மையங்களில் நடக்கிறது
    • இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 6 ஆயிரத்து 230 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.

    பரமக்குடி கே.ஜே.எம். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ராமநா தபுரத்தில் வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யத ம்மாள் கலை அறிவியல் கல்லூரி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி, செய்ய தம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.

    தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் வழங்கப்பட்ட புகை படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்தினை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று கொண்டு வர வேண்டும்.

    அரசால் வழங்கப் பட்டுள்ள புகைப்படத்து டன் கூடிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டும். தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும்.

    காலதாமதமாக வருப வர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி இல்லை. விண்ணப்ப தாரர்கள் தேர்வுக்கு வரும் பொழுது அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா ஆகிய வற்றை தவிர வேறு எதுவும் கொண்டுவரக்கூடாது.

    இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை தெரிவித்துள்ளார்.

    • தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடியில் உள்ள சுதந் திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகர–னார் நினைவிடத்தில் செப்டம்பர் 11-ந்தேதி தியாகி நினைவு தினம் அனுசரித்தல் தொடர் பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை முன்னிலையில், மாவட்ட மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமை–யில் அனைத்துத்துறை அலு–வலர்கள் மற்றும் சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரி–வித்ததாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு விதிமுறைகளை பின் பற்றி நினைவு தின நிகழ்ச் சியில் பங்கேற்றிடும் வகை–யில் அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு கொடுத்து காவல் துறையு–டன் ஒருங்கிணைந்து தேவை–யான முன் அனுமதிகளை பெற்றிட வேண்டும்.

    காவல்துறை வழிகாட்டு–தலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம் பர பலகை வைத்துக் கொள் ளவும். வெளி மாவட்டங்க–ளிலிருந்து வருபவர்களுக்கு தேவையான முன் அனுமதி காவல்துறை மூலம் அனுமதி சீட்டு பெற்று வந்து செல்ல தேவையான நடவடிக்கை–களை முன்கூட்டியே மேற் கொள்ள வேண்டும்.

    மேலும் நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நினைவு நாள் அன்று வெளியூரிலிருந்து பரமக்குடி–யில் உள்ள நினைவிடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு காவல்துறையின் மூலம் உரிய வழித்தடங்கள் வழி–யாக பேருந்து சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. அனும–திக்கப்பட்ட வழித்த–டங்களில் சென்று நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுச் செல்லவும். மேலும் விழா–வினை சிறந்த முறையில் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் தார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் வரு–வாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார்கள் ஸ்ரீதர் (ராம–நாதபுரம்), பழனிக் குமார் (கீழக்கரை), கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய–குமார், தேவேந்திரர் பண் பாட்டு கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முத்துக் கூரி (ராமநாதபுரம்), மகேஷ் (பரமக்குடி) மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே.முனியசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கள் முனியசாமி (கிழக்கு), சேகர் (மேற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 79 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, கடந்த 18 -ந்தேதி முதல் 20-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விடுபட்டுப் போனவர்கள், அரசு அறிவிப்பின்படி முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுபவர்கள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்தனர்.

    இதன் அடிப்படையில் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,02,617 குடும்ப அட்டைகளில், 3,18,045 குடும்ப அட்டைதார்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது 79 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்படும் விண்ணப் பங்கள் மட்டும் அரசு அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளன.

    கிராமப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவ லர்கள், கிராம வருவாய் உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களும், நகர் பகுதிகளில் பில் கலெக்டர்களும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, ராமேசுவரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 9 தாலுகாக்களில் கள ஆய்வில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள 775 ரேஷன் கடைகளுக்கு தலா ஒருவர் வீதம் 775 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ராமநாதபுரத்தில் உணவு தானிய கிடங்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • மண்டல மேலாளர் பாஃப்பல் பீர் சிங் இந்த சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் இந்திய உணவு கழகத்தின் 12,530 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு உள்ளது. மத்திய அரசின் இந்திய உணவுக்கழகம் சார்பில் இந்தக் கிடங்கில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டல மேலாளர் பாஃப்பல் பீர் சிங் இந்த சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார்.

    அரிசி மற்றும் கோதுமை இருப்பு குறித்து கேட்டறிந்த அவர், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். உணவுப்பொருட்களை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாதம் 4 ஆயிரம் டன் அரிசி, 100 டன் கோதுமை தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது மேலாளர் கார்த்திகேயன், தரமேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிய திட்டங்கள் அறிவிப்புக்கு முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
    • மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    தொண்டி

    கடந்த வாரம் ராமநாத புரத்தில் நடந்த மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப்போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 33 படகு களின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொண்டி பகுதி மீனவர்கள் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையின் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் டாக்டர் சீனிராஜன், ராமேசுவம் வில்லாயுதம் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் பால் மாஸ் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார் ராமநாதபுரம் மலைச்சாமி, உப்பூர் துரைபாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோர பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • தனுஷ்கோடி கடலோர பகுதியில் கேட்பாரற்று கஞ்சா மூடை கிடந்தது.
    • இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா மூட்டை கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், தங்கம் ஆகியவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க கடலோர போலீசார் தீவிர நடவ டிக்கை எடுத்து வரு கின்றனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை. வாரத்தில் 3 அல்லது 4 சம்பவங்கள் இதுபோன்று நடைபெறு கிறது.

    இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று காலை கரை ஒதுங்கிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் இலங்கையில் இருந்து கடத்தி வரும்போது கடத்தல்காரர்கள் சோதனைக்கு பயந்து போட்டுவிட்டுச் சென்றார்க ளா? அல்லது தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா மூட்டை கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9, 10-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
    • அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளி நடைபெறு கிறது. இந்த மாதிரி பள்ளியில் சேர்க்கை என்பது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாண விகளின் கல்வித் திறன் அடிப்படையில் தேர்வு செய்து மாதிரி பள்ளிக்கு அனுமதிக்கப் படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் 11,12 ஆகிய வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று

    9,10-ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9,10 ஆகிய வகுப்புகளின் படித்து சிறப்பும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 80 பேர் தேர்வு செய்யப்பட்டு இது குறித்து அந்த மாணவர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்க ளுடன் பள்ளிக்கு வந்து விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்க ளிடம் கொடுத்தனர்.

    இது குறித்து பள்ளி முதல்வர் ரவி கூறியதாவது:-

    கல்வி வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்க ளின் விருப்பத்திற் கேற்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப் பட்டு அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி யாக அனைத்து வசதிகளும் வழங்கி கல்வி கற்பிக்கப்ப டுகின்றன.

    நடப்பா ண்டில் கூடுதலாக 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொ டங்க உள்ளது. மாணவ, மாணவி கள் சிறந்த முறையில் பயி ன்று உயர்கல்வி படிப்புக்கான அரசு தேர்வு களில் அதிக மதி ப்பெண் பெற்று மருத்து வம், பொறியியல், சட்டப் படிப்பு, வேளாண்மை படிப்பு போன்றவற்றில் அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×