என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானிய கிடங்கு"

    • ராமநாதபுரத்தில் உணவு தானிய கிடங்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • மண்டல மேலாளர் பாஃப்பல் பீர் சிங் இந்த சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் இந்திய உணவு கழகத்தின் 12,530 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு உள்ளது. மத்திய அரசின் இந்திய உணவுக்கழகம் சார்பில் இந்தக் கிடங்கில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டல மேலாளர் பாஃப்பல் பீர் சிங் இந்த சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார்.

    அரிசி மற்றும் கோதுமை இருப்பு குறித்து கேட்டறிந்த அவர், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். உணவுப்பொருட்களை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாதம் 4 ஆயிரம் டன் அரிசி, 100 டன் கோதுமை தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது மேலாளர் கார்த்திகேயன், தரமேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிய உணவு தானிய கிடங்கு திறப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கு தெளிச்சத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் புதிதாக ரூ.12.51 லட்சம் செலவில் உணவு தானிய கிடங்கு அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு தெளிச்சத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மங்களேஸ்வரி சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய கட்டிடத்தை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சந்திரமோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜீவ் காந்தி, வார்டு உறுப்பினர்கள் புஷ்பா காளிதாஸ், மாரிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கண்ணன் நன்றி கூறினார்.


    ×