என் மலர்
நீங்கள் தேடியது "Cannabis Bag"
- தனுஷ்கோடி கடலோர பகுதியில் கேட்பாரற்று கஞ்சா மூடை கிடந்தது.
- இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா மூட்டை கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், தங்கம் ஆகியவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க கடலோர போலீசார் தீவிர நடவ டிக்கை எடுத்து வரு கின்றனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை. வாரத்தில் 3 அல்லது 4 சம்பவங்கள் இதுபோன்று நடைபெறு கிறது.
இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று காலை கரை ஒதுங்கிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் இலங்கையில் இருந்து கடத்தி வரும்போது கடத்தல்காரர்கள் சோதனைக்கு பயந்து போட்டுவிட்டுச் சென்றார்க ளா? அல்லது தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா மூட்டை கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






