பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கமுதி அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அரசு கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார்.

முகாமில் 164 பயனாளி களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்தின் வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை மனுக்கள் மூலம் கொடுத்து பெற்றுக்கொள்ளவே நடத்தப்படுகின்றன.

கமுதி தாலுகாவில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இது பாராட்டுக்குரியது.

இதனை பரமக்குடியில் அரசு கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.

விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், கமுதி யூனியன் மேனேஜர் ராமச் சந்திரன், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, கமுதி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் அய்யனார் மாவட்ட இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com