என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும்
    X

    ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும்

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் அதிகபட்சமாக 53 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் அபிராமம் பேரூராட்சி, பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சி கள், முதுகுளத்தூர் ஒன்றி யத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளையும் சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அபிராமத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக மான மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகு ளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் அலைச்சல் ஏற்படுகிறது.

    அரசு நலதிட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிர மங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்ப தற்காக அபிராமத்தை தலைமை யிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    மத்திய, மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்களை பெற கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று வர வேண்டி உள்ளது. இன்னும் அபி ராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் பின்தங்கிய பகுதிகளாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அபிராமத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப் பட்டால் அந்த பகுதி கிராம மக்கள் பயனடைவார்கள். அந்த பகுதி வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×