search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Union office"

    • வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி கலந்து கொண்டனர்.
    • ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பழைய டாட்டா ஸ்பாசியா கோல்டு 4 சக்கர வாகனம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

    வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இறுதியில் அதிகபட்ச தொகையாக ரூ.65,050-க்கு ஏலம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஓன்றிய பொறியாளர் வெள்ளைபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் அதிகபட்சமாக 53 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் அபிராமம் பேரூராட்சி, பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சி கள், முதுகுளத்தூர் ஒன்றி யத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளையும் சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அபிராமத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக மான மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகு ளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் அலைச்சல் ஏற்படுகிறது.

    அரசு நலதிட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிர மங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்ப தற்காக அபிராமத்தை தலைமை யிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    மத்திய, மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்களை பெற கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று வர வேண்டி உள்ளது. இன்னும் அபி ராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் பின்தங்கிய பகுதிகளாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அபிராமத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப் பட்டால் அந்த பகுதி கிராம மக்கள் பயனடைவார்கள். அந்த பகுதி வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்தது.
    • இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31-ந்தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலு வலகத்தில் நடை பெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி யாளர் பணி மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடை பெற்றது. புதுக்கோட்டையில் உள்ள யூனியன் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது விண்ணப்பதாரர்களிடம் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், ஆணையாளர் ஹெ லன் பெண்மணி, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகி யோர் நேர்காணல் நடத்தினர். நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றி தழ்கள் சரிபார்ப்பு நடந்தது.

    அலுவலக உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போது மானது ஆனால் என்ஜினீயரிங் பட்டதாரிகள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என 2 காலி பணியிடங்களுக்கு 656 பேர் நேர்காணக்கு வந்திருந்த தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. நேர்காணலின் போது மேலாளர் சண்முக சுந்தரி மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    நாளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் காலியாக உள்ள இரவு காவலாளி பணிக்கான நேர்முகத் தேர்வு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் 180-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுடன் நேர்காணல் நடைபெற உள்ளது. இதனைத் தொ டர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31-ந்தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலு வலகத்தில் நடை பெறுகிறது. இதில் மா வட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) கலந்து கொண்டு நேர்கா ணலை நடத்துகிறார்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து வரவேற்புரையாற்றினார்.

    காங்கயம்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அலுவலகத்திற்கு என ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து வரவேற்புரையாற்றினார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி 4 -ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜீவிதா ஜவஹர், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, பா.ராகவேந்திரன், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் வரி மிக அதிக அளவு வசூலிக்கின்றனர்.

    அவினாசி :

    அவினாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை, சின்னேரி பாளையம், நடுவச்சேரி ஆகிய 3 ஊராட்சி பகுதியில் 20, 25 நாட்களுககு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், பழங்கரை ஊராட்சி துணைத்த லைவர் மிலிட் டரி நடராசன் உள்ளிட்டோர் கூறுகையில் , எங்கள் பகுதியில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள்தொகை தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் 5 ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே அளவு கொடுப்பதுடன் வாரம் ஒருமுறை வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிவிட்டு பழங்கரை, சின்னேரி பாளையம், நடுவச்சேரி ,பொங்குபாளையம் ஆகிய ஊராட்சி பகுதி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் மிக குறைந்த அளவு 20,25 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தந்துவிட்டு தண்ணீர் வரி மிக அதிக அளவு வசூலிக்கின்றனர். குடிநீர் அனைத்துப்பகுதிகளுக்கும் வழங்குவது போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இநத இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
    • பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு ட்பட்ட 29 வது வார்டு பகுதியில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் அந்த பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவு உள்ளன. இந்த நிலையில் நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் சிகிச்சைக்காகவும் பலர் தினம் வந்து செல்கின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

    இந்த பகுதிக்கு அடிப்படை தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களுக்கு பேருந்துக்காக காத்திருக்க வேண்டிக்கும்போது தளி சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாத காரணத்தால் பல ஆண்டு காலமாக சாலை ஓரம் நின்று பஸ்சில் ஏறி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை, வெயில் காலங்களில் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஆக்கிரப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை அகற்றி பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை பேருந்து நிறுத்த அமைக்கப்படவில்லை.ஆகையால் சம்பந்தப்பட்ட உடுமலை நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×