என் மலர்
நீங்கள் தேடியது "வனத்துறை அறிவுறுத்தல்"
- தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்தவதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
- வங்காநரி வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்–பாளையம், ரெங்கனூர், கொட்டவாடி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில், தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்தவதற்கு முன், 'நரி' முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வங்காநரி பிடிப்பதை தவிர்த்து பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாழப்பாடி வனத்துறை சார்பில், ரெங்கனூர், சின்னம்ம நாயக்கன்பாளையம், கொட்டவாடி கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது.
வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் நடந்த இம்முகாமில், வங்காநரி வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வங்காநரி பிடிப்பதை கைவிட வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பல நூறு ஆண்டுகளாக முன்னோர்கள் வழியில் பொங்கல் பண்டிகை தோறும் நடந்து வரும் வங்காநரி வழிபாடு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறையும், தமிழக அரசும் அனுமதிக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவவுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
பச்சை கிளி, மைனா, பஞ்சவர்ண புறா போன்ற உயிரினங்களை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. அதனை வளர்த்தால் உடனடியாக வன அலுவலகங்களில் ஒப் படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரி வித்து உள்ளது.
வன உயிரினப்பா துகாப்பு சட்டம் 1972-ன் படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்ச வர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங் காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப் படி குற்றமாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கக்கூடிய வன உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்ச், பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.
எனவே வளர்ப்பில் உள்ள கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். வனப் பணியாளர்கள் ரோந்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை வளர்த்தவர்களுக்கு ரூ.25ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், என்று ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.