என் மலர்
ராமநாதபுரம்
- இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைய வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்ட பம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், இமானுவேல் சேகரனாருக்கு அவரின் தியாக உணர்வை போற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன டிப்படையில் மணிமண்டபம் அமையவுள்ள இடம் பார்வையிடப் பட்டுள்ளது.
நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்குரிய அனுமதியினை பெற்று விரைவில் பணிகள் நடை பெறும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
பின்னர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபு ரம் தி.மு.க மாவட்ட செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், கூடுதல் இயக்குனர் தமிழ் செல்வ ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் கலெக்டர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர சபை தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அஜிதா பர்வீன்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜய குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், தி.மு.க. விவசாய அணி மாநில துணைச் செயலாளரும்,
முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருக வேல் மற்றும் இமானுவேல் சேகரனாரின் மகள் சுந்தரி பிரபா ராணி,தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.
- தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் கால் நடைகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
காய்கனி, உணவுப் பொருட்களை வாங்கி வாகனங்களில் வைத்து விட்டு அடுத்த கடைக்கு செல்வதற்குள் மாடுகள் அத்துமீறி வாகனத்தில் வைத்துள்ள பொட்ட லங்களை கடித்து சாலையில் வீசி மேய்ந்து விடுகிறது.மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீண்ட தூரம் செல்லும் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து மற்றும் சுற்றுலா வாக னங்களும் சாலையின் குறுக்கே செல்லும் கால்ந டைகளால் விபத்தில் சிக்குகிறது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாட்டு உரிமை யாளர்கள் பொது சாலையில் போக்கு வரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக திரியும் தங்களது கால்நடை களை அக்டோபர் மாதம் 8-ந் தேதிக்குள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 9-ந் தேதி முதல் சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்கப்பட்டு, மீட்க வரும் கால்நடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் 3 தினங்களுக்குள் மீட்கப்படாத கால்நடை களை பொது ஏலம் விடப்படும் என தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- முத்துமாரியம்மன் கோவில் முளைகொட்டு உற்சவம் நடந்தது.
- பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட னர்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நொச்சி ஊரணி கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட னர்.
தொடர்ந்து 100-க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பலர் தங்களது நேர்த்திக்கடனை நிறை வேற்றினர். ஒயிலாட்டம், அன்னதானம் நடைபெற்றது.
இதில் நொச்சிஊரணி ஊராட்சி மன்ற தலைவர் சீனி அரசு, கிராம தலைவர் தங்கையா, செயலாளர் ரத்தினம், துணைச் செயலா ளர் இருளாண்டி, பொருளா ளர் அழகர் பெருமாள் உட்பட சுற்றுபுற கிராமங் களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- திருக்குறளை தமிழி எழுத்தில் எழுதி திருப்புல்லாணி மாணவர்கள் அசத்தினார்கள்.
- தலைமையாசிரியர் புரூணா ரத்னகுமாரி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் தமிழி எழுத்து பயிற்சியும், திருக்குறளை தமிழி எழுத்தில் எழுதும் போட்டியும் நடைபெற்றது.
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களில் ஆர்வமுள்ள 20 பேருக்கு, சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி கல்வெட்டு எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் பயிற்சி தரப்பட்டது. பயிற்சியை மன்றச் செயலரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு நடத்தினார்.
பயிற்சிக்குப் பின் தமிழி எழுத்துகளில் திருக்குறளை எழுதும் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ம.திவாகரன், சு.ஸ்ரீவிபின் மு.சந்தோஷ், ரா.ஜனனிஸ்ரீ, மு.ரித்திகாஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் புரூணா ரத்னகுமாரி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
- ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் தொகுதியின் துணைத் தலைவர் முஹம்மது மீராசா தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தொகுதியின் செயலாளர் அக்பர் அலி வரவேற்றார்.வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டின் அவசியத்தை கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் சோமு, தொகுதியின் துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பாரூக் ராஜா முஹம்மது, ஜான் முஹம்மது மற்றும் ராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டினம், திருப்புல்லாணி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக தொகுதியின் பொருளாளர் கீழை அஸ்ரப் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது
- விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் விழிப்புணர்வு பேரணியை அபிராமம் கல்வி பொறுப்பு கழக தலைவர் ஹபீப் முகம்மது தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்திலிருந்து நத்தம் பஸ் நிறுத்தம் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
பள்ளி செயலாளர் அஷ்ரப் ஜுனைத், தாளாளர் அகமது நைனார், தலைமை ஆசிரியர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முகமது இக்பால், உதவி திட்ட அலுவலர்கள் அலி அக்பர் ரியாஸ், அப்துல் ஹமீது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அதேபோல் கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாமில் மாணவர்கள் தூய்மைப் பணி செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- இல்லம் தேடி இளைஞரணி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள சாத்தான்குளம் ஊராட்சி யில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மாவட்ட இளைஞரணி இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படியும், மாநில இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவு றுத்தலின் படியும், மாநில இளை ஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆலோசனையின் பேரில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் மேற்கு ஒன்றிய பொறுப்பா ளர் கே.ஜே.பிரவீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், கவுன்சிலர் ரமேஷ் கண்ணன்,தௌபீக் ரஹ்மான், கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பா ளரும், நகரசபை துணை தலைவருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் பயாஸ், நயீம், சாத்தான்குளம் தொழிலதிபர் ரம்லி, இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதுகுளத்தூரில் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- முடிவில் ஊராட்சி செயலர் பொன்மணி நன்றி கூறினார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கலகுறிச்சி ஊராட்சியில் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா முன்னிலையில் காந்தி ெஜயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கலகுறிச்சி ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்ட உதவி எண்ணை கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட்டு ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பானுமதி முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேதுராமன், கிராம உதவியாளர் செண்பகவள்ளி மற்றும் வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்மணி நன்றி கூறினார்.
- மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
- அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.
பரமக்குடி
மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி யுவஸ்ரீபிரபா 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்றார். 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வாணிஸ்ரீ கலந்து கொண்டு மாநில அளவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். இம்மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, அன்புச்செல்வி ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கதலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜஹான் தலைமையில் ஆசிரியர் அஜ்மல்கான், உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
- முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த 68 முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவர் மன்ற இயக்கு நருமான சைமன் தலைமை யில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் மாண வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.தங்களுடன் படித்த முன்னாள் மாணவருக்கு உதவித் தொகை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பா ளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.
- மாவட்ட சைக்கிள் போட்டி நடத்தப்படும்.
- பட்டிணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் காலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.
ராமநாதபுரம்
அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் ேபாட்டிகள் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. 13, 15,17, வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு தனி தனியே போட்டிகள் நடத்தப்படும்.
ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் காலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 4 முதல் 10-வது இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல், வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகலுடன் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை ராமநாத புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- பசும்பொன்னில் வருகிற 28-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா இந்த மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் மிகச் சிறப் பாக நடைபெறுகிறது.
அக்டோபர் 28-ந்தேதி தேவரின் ஆன்மீக விழாவா கவும், 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவில் சிவாச்சா ரியார்கள் தெய்வ புராணங் களை பாடி தேவரின் நாமத்தை போற்றி பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து தேவன பக்தர் கள் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
29-ந்தேதி தேவரின் அர சியல் மிக சிறப்பாக நடை பெறும். அன்று அகில இந்திய பார்வர்டு கட்சியின் சார்பில் தேவர் ஆற்றிய பணிகளைப் பற்றியும், ஆன் மிக விழாவை பற்றியும் சொற்பொழிவு நடைபெ றும். 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அனைத்து அரசி யல் கட்சியின் உடைய தலைவர் பெருமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப் பாக ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது. 30-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உட்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கி றார்கள்.
அதேபோல் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக் கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி, ஒ.எஸ்.மணியன் உள்பட நிர்வாகிக ளும், ஓ.பி.எஸ். அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், தஞ்சை அறிவுடை நம்பி, ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலா ளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ, மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ்,
காங்கிரஸ் சார்பில் தமி ழகத் தலைவர் கே.எஸ்.அழ கிரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மண்டபம் ஜி.முனியசாமி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முதுகுளத் தூர் முருகன் உள்பட அனைத்து அரசியல் தலை வர்களும் வருகை தந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பசும்பொன் னில் தேவர் நினைவாக பொறுப்பாளர் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, ஹெலி காப்டர் தளம், பக்தர்கள் வந்து செல்லும் இடங்கள் உள்பட அனைத்தையும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவி ரமாக செய்து வருகி றார்கள். விழா ஏற்பாடுகளை நினை வாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், தங்க வேல் ராமச்சந்திரன் உட்பட பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.






