மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.
மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை
Published on

பரமக்குடி

மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி யுவஸ்ரீபிரபா 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்றார். 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வாணிஸ்ரீ கலந்து கொண்டு மாநில அளவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். இம்மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, அன்புச்செல்வி ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கதலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜஹான் தலைமையில் ஆசிரியர் அஜ்மல்கான், உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com