என் மலர்
ராமநாதபுரம்
- இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு
- ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் முகம்மது அமீர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 2-ம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரையும், உடற்கல்வி ஆசிரியரையும் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் பாராட்டினர்.
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
- பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் குரு வார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கல், அபிஷேக பால் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார். பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தொண்டி சிதம்பரேஸ்வர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர் கோவில், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு, நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமேசுவரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- கோவில் சன்னதிகள் மற்றும் 22 தீர்த்தங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ராமேசுவரம்:
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கிய ஸ்தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்கி வருகிறது. காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி, தை மாத அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.
அதன்படி நாளை மகளாய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் குவிவார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமேசுவரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அங்கு 24 மணி நேரமும் தூய்மை பணிகள் மேற்கொள்ள 100-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடற்கரை, கோவில் பகுதிகளில் கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளிலும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவில் சன்னதிகள் மற்றும் 22 தீர்த்தங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அக்னி தீர்த்த கடற்கரை, ராமேசுவரம் கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக 100 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையிலான போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் 15-ந்தேதி வரை பல்வேறு ஊர்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக பல நகரங்களுக்கும் 270-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சேதுகரை, தேவிபட்டினம், மூக்கையூர், மாரியூர் ஆகிய பகுதிகளுக்கும் தலா 15 சிறப்பு அரசு பஸ்கள் இயக்ககப்பட உள்ளது.
ரெயில் மூலம் வரும் பக்தர்கள் மண்டபம் வந்து அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரத்திற்கு வருவார்கள். மண்டபத்தில் இருந்தும் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
- சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.
இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.
இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாவில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர் முகாம் 14-ந் தேதி நடைபெறுகிறது.
- நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்
தமிழக அரசின் ஆணைக் கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட் டத்தின் அனைத்து வட்டங் களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி கீழ்க்கா ணும் கிராமங்களில் குறை தீர் முகாம் நடத்தப்பட உள் ளது.
ராமநாதபுரம் மாவட் டத்தில், ராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை கிராமம் (ரேசன்கடை), ராமேசுவரம் வட்டம் தங்கச்சிமடம் (ரேசன் கடை), திருவாடானை வட்டம் தோட்டா மங்களம் கிராமம் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் விளத்தூர் கிராமம் (இ-சேவை மையக் கட்டி டம்) முதுகுளத்தூர் வட்டம் விளங்குளத்தூர் கிராமம் (ரேசன் கடை), கடலாடி வட்டம் மேலக்கிடாரம் கிராமம் (ஊராட்சிமன்ற பஞ்சாயத்து அலுவலகம்) கமுதி வட்டம் முஸ்டகுறிச்சி கிராமம்(ரேசன்கடை) கீழக்கரை வட்டம் - மல்லல் கிராமம் (ரேசன் கடை) ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் சாத் தனூர் கிராமம் (ரேசன் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப் படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப் படும். மேலும் ரேசன் கடை களில் பொருள்பெற வரு கை தர இயலாத மூத்த குடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளி களுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்.
மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப் படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொது மக்கள் இம்முகாமில் தெரி வித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ராமநாதபுரம் மாவட் டத்திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர் கள் எதிர் வரும் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட கருவூலத்துறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகம் எதி ரில் உள்ள மாவட்ட கருவூ லத்துறை கட்டிடத்தில் தபால் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், கூட்டு றவு இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் அலுவல கம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.
கட்டிடத்தில் பல இடங் களில் சிமின்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலை யில் உள்ளது. முறையான பராமரிப்பின்றி சேத மடைந்த பகுதியில் மரங்களும் முளைத்து வருகின்றன.
இதனால் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் உள்ளது.
இதனால் இங்கு பணி யாற்றும் ஊழியர்கள் அச்சத் தில் உள்ளனர். எனவே, உடனடியாக சேதமடைந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி யில் 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படு கிறது. பாதாள சாக்கடையின் மொத்த நீளம் 63.40 கி.மீ.உள்ளது. நகர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம் பிள்ளை ஊருணி, சிங்காரத் தோப்பு, குண்டூருணி, நாக நாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.
இவற்றில் 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, கழுவூரணி யில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது.
நகர் பகுதியில் மொத்த முள்ள 1200 மென்ஹோல் களில் பலவற்றில் மண் மேடாகவும், குழாய்கள் சேத மடைந்தும், அடைப்புகள் காரணமாகவும் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் சிரமப் படுகின்றனர். இதையடுத்து புதிய குழாய்கள் மாற்றவும், புதிதாக பம்ப்பிங் மோட்டார் கள், பேட்டரிகள் வாங்கவும் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப் பட்டு இதற்கான டெண்டர் நடக்கிறது.இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ரெங்கராஜன் கூறுகையில் ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது. கழிவுநீர் மட்டுமின்றி மழை நீரும் புகுந்து விடுவதால் மென்ஹோல்கள் நிரம்பி பிரச்சினை ஏற்படுகிறது. நிரந்தரமாக பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிந் துள்ளோம். அவற்றை ரோபோ இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. புதிதாக குழாய் மாற்றுவதற் கும், பம்பிங் நிலையங்களில் புதிய பேட்டரிகள், மோட் டார் வாங்கி மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றார்.
- தேவர் குருபூஜை விழாவில் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பா டுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தேவர் ஜெயந்தியின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இதில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசிய தாவது:-
பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவுறுத் தப்பட்டுள்ளன.விதிமுறை களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை கருத்தில் கொண்டு பிற மாவட்டத்தினரும் நமது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட விதி முறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு போல் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கமுதியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வலியுறுத்தினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.மேலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசுகையில், மழை காலம் தொடங்கிவிட்டன. ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிராமப்பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. கமுதி யூனியனில் 30 பேரை சுகாதார பணியாளர்களாக நியமனம் செய்துள்ளோம். அவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
- கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.
கீழக்கரை
பள்ளி கல்வி துறை சார்பாக கலாமை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வினாடி, வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் பாத்திமா சனா, ராஜ கிரிஷா ஆகியோர் முதல் பரிசும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் நசாகா, ஆயிசா ராபிகா முதல் பரிசும் பெற்று மாவட்ட அளவில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றனர்.
ஓவியப்போட்டியில் ஆயிஷா ஸைனா 2-ம் பரிசு, கட்டுரைப்போட்டியில் பசிஹா 2-ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.
- பொதுமக்கள் எதிர்ப்பால் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.
- தனியார் செல்போன் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும், 20 அடி உயரத்தின் மீது செல்போன் டவர் அமைத்தால் அதன் கதிர்வீச்சுகள் சுற்றியுள்ள மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி முழுவதும் கடும் பாதிப்பினை உண்டாக்கு மென்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
டவர் அமைப்பதற்கான சுற்றுசூழல் மற்றும் நகராட்சியின் உரிய அனுமதி பெறாமலேயே செல்போன் அமைப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட கலெக்டர் பரிந்துரையின்படி கீழக்கரை தாலுகா வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு நேரில் சென்று செல்போன் டவர் அமைக்கும் வீட்டினை ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு செல்போன் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது என்று வட்டாட்சியர் பழனிக்குமாரிடம் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புகள் நிறைந்த இடங்களில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சி யினை தனியார் செல்போன் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.
ராமநாதபுரம்
தமிழக அரசு 'வேளாண்மை துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி" பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்ப டுத்தப்பட உள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வயல்களில் உரிய அளவில் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள், ஊக்கத்தொகை பெறு வதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.






